Published : 04 Dec 2017 02:43 PM
Last Updated : 04 Dec 2017 02:43 PM
தஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள திட்டை திருத்தலத்தில் இறைவன் வசிஷ்டேஷ்வரர் மட்டுமின்றி அங்கே தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் குரு பகவானும் மிக மிக விசேஷமானவர். தலம், தீர்த்தம், மூர்த்தம் என்று பெருமைகள் கொண்ட அற்புதமான இந்த க்ஷேத்திரத்தில், சிவ மைந்தர்களான அண்ணன் விநாயகப் பெருமானுக்கும் தம்பி முருகக்கடவுளுக்கும் கூட முக்கியத்துவம் உண்டு.
எப்படி என்கிறீர்களா?
அதாவது கணபதியை வணங்கி பலன் பெற்ற கதையும் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற சரிதமும் இந்தத் தலத்தின் கூடுதல் விசேஷங்கள்.
இந்திரன், இந்தத் தலத்தின் ஸ்ரீபுஷ்டி விநாயகரை வழிபட்டு அருள்பெற்றான். தவிர, அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து காவிரியை வெளிக்கொண்டு வருகிற ஆற்றலையும் பெற்றான். தேவர்களும் மகாவிஷ்ணுவும் விநாயகப்பெருமானை வணங்கி அருள் பெற்றனர்.
ஸ்ரீமுருகப்பெருமான், இங்கே ஞானம் அருளும் வல்லமையுடன் திகழ்வதாகச் சொல்கிறது புராணம். அதாவது, தென்குடித்திட்டை எனும் திருநாமம், இந்த ஊருக்கு வந்ததற்குக் காரணமே முருகக்கடவுள்தான் என்கின்றன புராணங்கள்.
அதாவது, திட்டை என்பது மேடு. ஞானமேடு. தென்குடி என்பது மனித உடல். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களைக் கொண்ட மனித உடல், ஆறுபடைவீடுகளையும் கொண்ட ஆறு முகங்களையும் கொண்ட கந்தக் கடவுளால் அருள்ஞானம் கிடைக்கப்பெறும் தலமாக போற்றப்படுகிறது இங்கே!
ஆகவே, வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முருகக் கடவுளையும் சங்கடர்ஹர சதுர்த்தி முதலான நாட்களில் விநாயகரையும் வந்து வழிபடுங்கள். எல்லா தோஷங்களும் விலகும்; சந்தோஷம் மட்டுமே இருக்கும் என்பது சத்தியம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT