Last Updated : 30 Dec, 2017 11:29 AM

 

Published : 30 Dec 2017 11:29 AM
Last Updated : 30 Dec 2017 11:29 AM

கார்த்திகையில் கந்த தரிசனம்... கடன் தொல்லை தீரும்!

கார்த்திகை நட்சத்திர நாளில், கந்தபெருமானை வணங்கினால் நம் கவலையெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வார் கந்தவேலன். இன்று கார்த்திகை நட்சத்திரம். எனவே மாலையில் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசியுங்கள்.

முருகனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை. இன்று 30ம் தேதி கார்த்திகை நட்சத்திர நன்னாள். இந்த நாளில், முருகப்பெருமானை வணங்குவது வளம் சேர்க்கும். நலம் தரும். நல்லன எல்லாம் தந்து நம்மையும் நம் வாழ்வையும் உயர்த்தி அருள்வார் முருகக் கடவுள்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப்போகிறதே என்று கவலைப்படுவோர், வீடு மனை வாங்குவதிலோ விற்பதிலோ சிக்கல்கள் இருக்கிறது என கலங்குவோர், உரிய உத்தியோகம் கிடைக்கவில்லையே எனப் புலம்புவோர், உத்தியோகத்தில் பதவி உயர்வோ சம்பள உயர்வோ கிடைக்கவில்லையே என வருந்துவோர் இந்தக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில், மாலையில் முருகப் பெருமானை தரிசியுங்கள்.

இன்று பிரதோஷமும் கூட. அதிலும் குறிப்பாக, சனிப் பிரதோஷம். சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம். ஆக, அப்பன் சிவனுக்கும் உகந்த நாள். மைந்தன் மயில்வாகனனுக்கு உரிய நாள். எனவே அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வழிபடுங்கள். அப்படியே பிராகாரத்தில் அற்புதமாகக் காட்சி தரும் சுப்ரமண்யருக்கு செவ்வரளி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மனையில் உள்ள வழக்குகள் வெற்றியைத் தேடித் தரும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்வார் கந்தவேள் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x