Last Updated : 04 Nov, 2017 05:38 PM

 

Published : 04 Nov 2017 05:38 PM
Last Updated : 04 Nov 2017 05:38 PM

இசையை வசமாக்கும் மந்திரம்!

இசையின் மீது எவருக்குத்தான் விருப்பம் இல்லை, சொல்லுங்கள். நம்மில் பலர், இசையை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். ஒரு சிலர், அந்த இசையைக் கற்றறிய வேண்டும்; அதில் மிகப் பெரிய விற்பன்னராக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இசை என்பது மிகப்பெரிய கலை என்பதில் சந்தேகமே இல்லை. எழுத்தைப் போல, ஓவியம் போல, இசை என்பதும் இறை வழங்குகிற கொடை!

இசை என்பது இசைப்பவர்களுக்கும் அந்த இசையைக் கேட் பவர்களுக்கும் மாமருந்து. அதனால்தான் துன்பம் நேர்கையில், யாழ் எடுத்து இசைக்க மாட்டாயா என்று பாடினார்கள். ஏனெனில், இசைக்கு மயங்குபவர்கள் மனிதர்கள் மட்டும் அல்ல. இசையைக் கேட்டால், அந்தக் கடவுளே இசைந்து வருவான் என்று போற்றுகிறார்கள்.

இசைஞானம் பெற... இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். இசையில் வல்லுநர் ஆவீர்கள் என்கிறார் காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்!

அந்த ஸ்லோகம் இதுதான்...

ஐம்ஸ்ரீ வீணாயை மம ஸங்கீத

வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா.

இதை தினமும் பூஜையறையில் அமர்ந்து, சிறிது நேரம் சொல்லுங்கள். கலையில், இசையில் சிறந்து விளங்குவீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x