Published : 03 Nov 2017 11:55 AM
Last Updated : 03 Nov 2017 11:55 AM
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள கோமதி அன்னை சமேத திரிபுராந்தீஸ்வரர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண உத்ஸவப் பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலியின் முக்கியப் பகுதிகளில் பாளையங்கோட்டையும் ஒன்று. இந்தப் பக்கம் டவுனில் நெல்லையப்பர் கோயில் உள்ளது. அதேபோல், சுலோச்சன முதலியார் பாலம் கடந்து, வண்ணாரப்பேட்டைக்கு அருகில் உள்ளது பாளையங்கோட்டை.
இங்கே ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்து உள்ளது திரிபுராந்தீஸ்வரர் கோயில். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீகோமதி அன்னை. வருடந்தோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உத்வஸப் பெருவிழா, விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த வருடத்துக்கான விழா, இன்று காலையில் கோலாகலமாகத் தொடங்கியது.
காலை 6 முதல் 7.05 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஐப்பசி திருக்கல்யாண உத்ஸவ விழா. இதையொட்டி, அம்பாளுக்கும் ஸ்வாமிக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
இதையடுத்து, தினமும் காலையும் மாலையும் திருவீதியுலா மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பாளை திருச்சிற்றம்பலம் வழிபாடு அறக்கட்டளையினரும் செய்து வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT