Published : 06 Nov 2017 04:08 PM
Last Updated : 06 Nov 2017 04:08 PM
சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் என்று நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரரைப் போற்றுகின்றனர். சென்னை கிண்டிக்கு அருகில் உள்ளது நங்கநல்லூர். இங்கே சிவபார்வதியாக, லிங்கரூபமாக இருந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்.
நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் காஞ்சி மகா பெரியவர் இந்தப் பகுதிக்கு வந்தபோது, இங்கே உள்ள திருக்குளத்தைக் கண்டார். குளத்துக்குள் சிவலிங்கத் திருமேனி உள்ளது. இதை எடுத்து அருகில் கோயில் கட்டுங்கள் என அருளினார்.
அதன்படி, குளத்தைத் தோண்டிப் பார்த்தபோது அழகிய லிங்கத் திருமேனி கிடைத்தது. ஒருகாலத்தில் எங்கே கோயில் இருந்ததோ அதே இடத்தில், பெரியவா ஆசியின்படி அழகிய ஆலயம் அமைக்கப்பட்டது.
சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். இங்கு உள்ள ஸ்ரீசுப்ரமண்யர் கொள்ளை அழகு. கந்தசஷ்டியின் போது இங்கு வந்து வணங்கினால், சந்தான பாக்கியம் கிடைக்கும். பிரதோஷ தரிசனம் செய்தால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்கிறார் இந்தக் கோயிலின் பாலாஜி வாத்தியார்.
சென்னை நங்கநல்லூரில், ஊரின் மையப்பகுதியில் இருந்தபடி சிவனார் அருள்பாலிக்கும் அற்புதமான தலம் இது. வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம், தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT