Last Updated : 20 Nov, 2017 05:11 PM

 

Published : 20 Nov 2017 05:11 PM
Last Updated : 20 Nov 2017 05:11 PM

அரைஞாண் கயிறு ஏன் தெரியுமா?

குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டிவிடும் பழக்கம் எதனால் ஏற்பட்டது தெரியுமா.

கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பானது கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதாவது அடுத்தடுத்த வளர்ச்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்கிறது குழந்தை. அதுவே இயற்கை. அதனால் இதயத்துடிப்பு அதிகமாகவே இருக்கும்.

இந்த காலகட்டத்தில் அதன் இதயத் துடிப்பை சீராக்க உதவுவது எது தெரியுமா? குழந்தையின் இடுப்பில் கட்டப்படும் அரைஞாண் கயிறு என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இடுப்பு க்குஅருகில் மட்டுமே ரத்தக் குழாய்கள் மெலிதாக இருக்கும். அதேபோல் தோலின் மிக அருகில் செல்கின்றன.

எனவே ஈரம் பட்டாலும் அறுபடாத பொருளான வெள்ளை எருக்கம் பூவின் நாரினை கயிறாகத் திரித்து, அதையே குழந்தைகளின் இடுப்பில் கட்டிவிடுவார்கள்.ஆனால், நம் முன்னோர்கள், அவ்வாறு கட்டுவது பேய், பிசாசு, காத்துக்கறுப்பு அண்டாமல் இருப்பதற்காக என்ற நம்பிக்கையை விதைத்தார்கள்!

வயதில் பெரியோர் உள்ள இல்லங்களில், அவர்கள் இன்றைக்கும் தங்களின் பேரக்குழந்தைகளுக்கும் பேத்திகளுக்கும் வெள்ளை எருக்கம் நார் - அரைஞாண் கயிறைக் கட்டி இதயத் துடிப்பை சீராக்கி குழந்தை வளர்ச்சியை நல்ல முறையில் கட்டிக் காக்கின்றனர் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x