Published : 16 Nov 2017 03:40 PM
Last Updated : 16 Nov 2017 03:40 PM
மிகப்பெரிய செல்வம், குழந்தைகள்தான். குழந்தைச் செல்வம் இல்லாத வீட்டில், வேறு எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனில்லை. ‘எவ்வளவு சொத்துகள் இருந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை’ என்றால் அதுவே மிகப்பெரிய ஏக்கமாகவும் துக்கமாகவும் கலங்கடித்து விடுவதை அனுபவித்தவர்களால் மட்டுமே சொல்ல முடியும்!
நம் குழந்தைகளுக்கு ஒன்றென்றால், நாம் துடித்துப் போய்விடுவோம். அவர்களின் ஒரு சின்ன தலைவலியைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ளமுடியாது. அந்தக் குழந்தை, சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்துவிடும். சாப்பிடாததாலும் சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டதாலும் இரவில் தூங்காமல், எதற்காகவேனும் அழுது கொண்டே இருக்கும். இதை பாலாரிஷ்ட நோய் என்பார்கள்.
இந்தப் பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக ஆரோக்கியதுடன் வலம் வரவும் வளரவும் இந்த ஸ்லோகம் உதவும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் பாலாஜி வாத்தியார்.
பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியவில்லையோ, உணவின்மையால் தவித்து அழுகிறார்களோ அப்போதெல்லாம் சொல்லுங்கள். குழந்தைகள் உடனே துள்ளிக்குதித்து ஆடத் தொடங்குவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT