Published : 16 Nov 2017 06:34 PM
Last Updated : 16 Nov 2017 06:34 PM
பாராயணம் பண்ணுவது குறித்தும் ஜபம் செய்வது தொடர்பாகவும் தியானிப்பதன் மூலமாகவும் நித்தியானுஷ்டங்களைச் செய்பவர்களுக்கு எப்போதுமே ஒரு குழப்பம் உண்டு. செய்பவர்களுக்கே குழப்பமெனில், எதைச் செய்வது என்று குழம்புகிறவர்களும் இருப்பார்கள்தானே!
இப்படியானதொரு சந்தேகத்தை நிவர்த்திக்கும்படி, காஞ்சி மகாபெரியவரிடம் கேட்டார் ஒருவர்.
''இந்த அவசர யுகத்தில், பாராயணம், ஜபம், தியானம் போன்றவற்றை அனுஷ்டிக்க முடியவில்லையே சுவாமி?'' என்று காஞ்சி மகா பெரியவரிடம் பக்தர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளித்தார் காஞ்சி மகான் இப்படி...
''இப்போது இருக்கும்படியான லோக வழியில், பாராயணம், ஜபம், தியானம் பற்றியெல்லாம் யோசிக்கச் சாவகாசம் இல்லை. மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான அவகாசம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது, ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்.
தேவியினுடைய சரண கமலத்தை எப்போதும் உபாசித்தால், அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவருத்தி ஏற்படும். அதற்கு முதல்படி பாராயணம். அதற்கப்புறம் ஜபம். பின்பு தியானம் பண்ணுவது. அப்படித் தியானம் பண்ணும் போது, ‘பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக் கொண்டிருக்கும்படியாக அநுக்ரஹம் செய்யவேணும்’ என்று பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT