Published : 14 Nov 2017 02:19 PM
Last Updated : 14 Nov 2017 02:19 PM
ஒருமுறை, காஞ்சி மகாபெரியவரிடம் பக்தர் ஒருவர், ஸ்ரீகிருஷ்ணாவதாரமே பரிபூரண அவதாரம் என்று சொல்கிறார்களே. ஏன் ஸ்வாமி? என்று கேட்டார்.
உடனே மகாபெரியவர் புன்னகைத்தபடியே சொன்னார்... '' ஸ்ரீகிருஷ்ணன், ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் இளைஞன், இவற்றை அனுபவிக்கும் ரசிகன், மல்யுத்தத்தில் தேர்ந்தவன், காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, திரௌபதிக்கு நேர்ந்தது போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களை காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற அநாதர்களை ரக்ஷிக்கும் பக்தவத்ஸலன், பீஷ்மருக்கு மாத்திரமல்ல, தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகப்படுத்திய வேடனுக்கு முக்தி கொடுப்பவன்... இப்படி பல லீலைகள் செய்திருக்கிறான்.
பற்பல போக்குகள் கொண்ட மக்கள் எல்லோரையும் ,தனது வகைவகையான லீலைகளால், தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன்மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாகிக் கடைத்தேற்ற வைத்த ஸ்ரீகிருஷ்ணாவதாரமே பரிபூரண அவதாரம்!'' என்று விளக்கம் அளித்தார்.
அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT