Last Updated : 09 Nov, 2017 02:47 PM

 

Published : 09 Nov 2017 02:47 PM
Last Updated : 09 Nov 2017 02:47 PM

தைலக்காப்பு, சந்தனக்காப்பு!

எல்லா ஆலயங்களிலும் இறைத் திருமேனிக்கு, அபிஷேகங்கள் நடப்பதும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வதும் வழக்கம்தான். ஆனால் வேதாரண்யம் தலத்தில், சிவனாருக்கு வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

இங்கே, வேதாரண்யம் திருத்தலத்தில் இன்னுமொரு விசேஷம் என்ன தெரியுமா? சிவனாருக்கு எந்தப் புத்தாடை வஸ்திரம் அணிவிப்பதாக இருந்தாலும் அதை முதலில் நனைத்து காய வைத்த பிறகே சாத்துவார்கள்.

வேதாரண்யம் ஸ்ரீவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை, சித்திரை மாதத்தில் வரும் சுக்லபட்சத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் தைலக் காப்பு அபிஷேகம் நடைபெறும். மறுநாள், கையாலேயே சந்தனம் அரைத்து அம்பாள் மற்றும் -ஸ்வாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது!

இந்த சந்தனக்காப்பு அவர்கள் திருமேனியில் ஒரு வருடம் இருக்குமாம். மீண்டும் அடுத்த ஆண்டு சித்திரை மாதமே களையப்பட்டு மீண்டும் பூசப்படுமாம். இறைவன் திருமேனியில் தினசரி மாலைகள் மட்டுமே அணிவிக்கப்படும் என்பது வேறு எந்தத் தலத்துக்கும் இல்லாத சிறப்பு என்கிறார்கள் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x