Published : 11 Nov 2017 01:33 PM
Last Updated : 11 Nov 2017 01:33 PM
மனதுக்கும் உடலுக்கும் தொடர்பு உண்டு. மனம் சரியில்லையெனில் உடல் கெட்டுப் போகும். உடல் கெட்டுப் போனால், மனம் துவண்டே போகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்றொரு பழமொழி உண்டு. இது எல்லோருக்குமான முதுமொழி. தேகம் ஆரோக்கியமாகத்தான் இருந்தால்தான் இங்கே ஓடியாடி வேலை செய்யமுடியும். நிம்மதியாய் நிறைவாய் வாழ முடியும்! அதனால்தான் தேக ஆரோக்கியத்தை வலியுறுத்துவதற்காக, இந்த அழகிய பொன்மொழியைச் சொல்லி வைத்தார்கள் முன்னோர்!
ஆமாம், தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். அதுவே வரம்.
அதனால்தான், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் வாசகமும் சொல்லிவைக்கப்பட்டது.
நோயில் இருந்து நம்மைக் காத்தருளும் கண்கண்ட தெய்வம் தன்வந்திரி பகவான். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:
நமக்கான நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியே பகவான் தன்வந்திரிதான். அவரை மனதார வழிபடுவோம்.
இந்த நாள் என்றில்லாமல், தினமும் காலையில் இந்த மந்திரத்தை ஜபித்து வந்தால், உடலே தக்கையாகும். மனசே றெக்கையாகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT