Published : 24 Nov 2017 04:34 PM
Last Updated : 24 Nov 2017 04:34 PM
மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில், வருடம் முழுவதும் விழாக்களும் விசேஷங்களும் அமர்க்களப்படும். பொதுவாகவே, திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, விமரிசையாக நடைபெறும்.
கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவையொட்டி, தினமும் ஸ்வாமி புறப்பாடு, திருவீதியுலா, விசேஷ அலங்காரம் மற்றும் பூஜைகள் என திருவண்ணாமலையே அமர்க்களப்படுகிறது. .
வாழ்வில் ஒருமுறையேனும் திருவண்ணாமலை திருத்தலத்தில், திருக்கார்த்திகை தீபத்தை எவரொருவர் தரிசிக்கிறாரோ, அவர்களுக்கு மறு பிறப்பு இல்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆகவே, தீபத் திருநாளின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, உண்ணாமுலையம்மனையும் அண்ணாமலையாரையும் மலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபத்தையும் தரிசிப்பார்கள்.
கொடியேற்றத்துடன் துவங்கிய திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தினமும் காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஸ்வாமி புறப்பாடு முதலான நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விழாவையொட்டி, தினமும் சர்வ அலங்காரத்தில், அம்பாளையும் சிவனாரையும் தரிசிக்கும் பாக்கியத்தைச் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT