Published : 07 Nov 2017 02:03 PM
Last Updated : 07 Nov 2017 02:03 PM
திருச்சி உறையூரில் இருந்தபடி அகிலத்தையும் மக்களையும் அன்பும் கருணையும் பொங்கக் காத்தருள்கிறாள் ஸ்ரீவெக்காளி அம்மன். உடலில் உஷ்ணம் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சி என்றும் இவரை சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
மனதில் மனிதர்களுக்கே தோன்றுகிற கர்வம், தேவையே இல்லாமல் ஏற்படுகிற பொறாமை, அவசியமே இல்லாமல் நடக்கிற பழிவாங்குதல் முதலான துர்குணங்களைப் போக்கும் மகாசக்தி ஸ்ரீவெக்காளித் தாய் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. இவளின் சந்நிதியில் ஒரேயொரு முறை வந்து நின்றால் போதும்... பிறகு அவள் நமக்குத் தாயாகிவிடுவாள்; நாம் அவளின் பிள்ளையாகி விடுவோம் என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள் பக்தர்கள்.
செய்வினை, பில்லிசூனியம், ஏவல் என எவரேனும் துர்சக்தியை நடமாட விட்டு, நம்மை முடக்குகிறார்கள் என நினைத்துக் கலங்குபவர்கள், திருச்சி உறையூரை உறைவிடமாகக் கொண்டு, கோயிலில் குடிகொண்டிருக்கும் இங்கே... இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீவெக்காளி அம்மனிடம் கண்ணீருடன் தங்கள் கவலையைக் கொட்டித் தீர்த்தால் போதும். பிறகு எந்த தீய சக்தியும் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வாள் அகிலத்து ராணி... வெக்காளித்தாய்.
இங்கு தரும் தீர்த்தப் பிரசாதத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வீடு முழுக்க தெளித்தால், தீய சக்தி ஓடிவிடும். அம்மனின் மகாசக்தி வீட்டினுள் குடியிருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT