Published : 25 Nov 2017 12:01 PM
Last Updated : 25 Nov 2017 12:01 PM
சாலை முத்துக்குமார சுவாமியை மனதார வேண்டினால், தடைப்பட்ட காரியங்கள் உடனே நடந்தேறும். திருமணம் முதலான மங்கல விஷயங்கள் நடைபெற்று, வீட்டையே சுபிட்சமாக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
தாமிரபரணி பாய்ந்தோடும் திருநெல்வேலியில் அமைந்து உள்ளது சாலை முத்துக்குமார சுவாமி திருக்கோயில். நெல்லை பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீசாலைக்குமார சுவாமி கோயில்.
திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியைத் தரிசித்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்தப் பலன்களை இங்கே, சாலைக்குமார சுவாமியைத் தரிசித்தாலும் கிடைக்கும் என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். திருச்செந்தூருக்கு இணையான தலம் இது என்று போற்றப்படுகிறது.
இங்கே உள்ள ஸ்ரீவள்ளியும் ஸ்ரீதெய்வானையும் ஸ்ரீசாலைக்குமார சுவாமியைப் பார்த்தபடி காட்சி தருவது அபூர்வம் மட்டும் அல்ல... சிறப்பும் கூட! இதனால் கல்யாண வரம் தரும் சாலைக்குமாரர் எனப் போற்றுகின்றனர்!
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கல்யாண வரம் கேட்டும் பிள்ளை வரம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்து வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இங்கே சந்நிதிக்கு முன்பாக திருமணம் செய்துகொள்கின்றனர். ஆகவே, எல்லா நாளும் பெருங்கூட்டமும் முகூர்த்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூட்டமும் என களை கட்டுகிறது சாலை முத்துக்குமார சுவாமி கோயில்.
சாலை முத்துக்குமார சுவாமியை தரிசித்தால்... வாழ்வில் சந்தோஷம் நிச்சயம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT