Last Updated : 13 Nov, 2017 05:10 PM

 

Published : 13 Nov 2017 05:10 PM
Last Updated : 13 Nov 2017 05:10 PM

காஞ்சி காமாட்சிக்கு அவதார ஆராதனை!

காஞ்சி மாநகரம் நகரேஷூ காஞ்சி என்று போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம். அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று புராணங்களே சொல்லும் புராதனப் பெருமைகள் கொண்ட தேசம் காஞ்சியம்பதி.

இங்கே, சிவாலயங்களில் அம்பாளுக்கு தனியே சந்நிதி இல்லை. மாறாக, உலகின் அத்தனை சக்தி பீடங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்கிறது காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம். எனவே இங்கு வேறு எந்தக் கோயிலிலும் அம்பாளுக்கு சந்நிதி இல்லை.

உலகுக்கு தலைமை சக்தியாக, நமக்கெல்லாம் அன்னையாகத் திகழும் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு, அவதார தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள், விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. அம்பாள் ஆவிர்பவித்த இடம், பிலாகாசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு, நூற்றுக்கும் மேற்பட்ட குடங்களால் பாலபிஷேகம் செய்யப்பட்டது.

நேற்று இரவு தங்கரதத்தில் பவனி வந்த காமாட்சி அன்னையைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பவனி வந்த அம்பாள், குளக்கரையில் உள்ள பூர மண்டபத்தில் காட்சி கொடுத்தார். அப்போது புஷ்பாஞ்சலி சேவை செய்யப்பட்டது. இதில் கூடை கூடையாக புஷ்பங்களைக் கொண்டு வந்து அம்பாளுக்குச் சார்த்தினார்கள். இதில் கலந்துகொண்டு தரிசித்தால், நம் சந்ததியையெல்லாம் வாழச் செய்வாள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஐப்பசி சோம வாரமான இன்றும் அம்பாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன என்று காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x