Published : 24 Nov 2017 10:26 AM
Last Updated : 24 Nov 2017 10:26 AM
காஞ்சி காமாட்சி அம்பாளை, கார்த்திகை வெள்ளிக்கிழமையில் தரிசித்து வழிபடுவது ரொம்பவே சிறப்பு. காமாட்சி அன்னையை செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்கின்றனர் பெண்கள்.
எந்த நகரத்துக்கும் இல்லாத பெருமை காஞ்சி மாநகரத்துக்கு உண்டு. காஞ்சியை ‘நகரேஷூ காஞ்சி’ எனப் போற்றுகிறது புராணம். அதாவது, நகரங்களில் சிறந்து விளங்குவது காஞ்சி மாநகரம் என்று அர்த்தம். இத்தனை பெருமை மிகு காஞ்சியம்பதியில், கொலுவிருந்து மொத்த அகிலத்தையும் ஆட்சி செய்கிறாள் காமாட்சி அம்பாள்.
காஞ்சிபுரத்தில் எந்தத் தலத்திலும் அம்பாளுக்கு சந்நிதி இல்லை. ஏனென்றால், சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைமை பீடமாகக் காஞ்சி நகரம் திகழ்கிறது. இதனால் அத்தனை அம்பாள் திருவடிவங்களுக்கும் தலைவியாக வீற்றிருக்கிறாள் காமாட்சி அன்னை. காஞ்சிபுரம் கோயிலில், தனி ஆலயத்தில், சாந்நித்தியம் பொங்க அருள்பாலிக்கும் காமாட்சி அன்னையின் பெருமையை உணர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தினமும் வந்தவண்ணம் இருக்கின்றனர்.
’ஒருமுறையேனும் காஞ்சி காமாட்சியை தரிசித்துவிடவேண்டும். அவள் திருமுகத்தின் முன்னே நின்று, மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். பிறகு இந்த வாழ்நாள் முழுவதும் உங்களைக் காத்தருள்வாள் அம்பாள்’ என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.
கார்த்திகை செவ்வாயும் வெள்ளியும் அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாளில், இங்கு வந்து, செவ்வரளி மாலையோ ரோஜா மாலையோ சார்த்தி வழிபட்டால், சகல யோகங்களும் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT