Published : 25 Nov 2017 02:37 PM
Last Updated : 25 Nov 2017 02:37 PM
காஞ்சி மகானைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர்.
ஆலகால விஷம் அருந்திய சிவபெருமானைக் காப்பாற்றியது எது? என்று காஞ்சி மகா பெரியவரிடம் பக்தர் ஒருவர் கேட்டார். அதற்கு மகா பெரியவர் சொன்னார்...
''அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘சர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைத்தான் சொல்கிறார்கள். அவளுடனே சேர்ந்திருப்பதால், பரமேஸ்வரன் சௌக்கியமாகவே இருக்கிறார்.
மங்களமே வடிவானவள் அம்பிகை. மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும்?
இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டும் கூட, பரமேஸ்வரன் சௌக்கியமாகவே இருக்கிறார். ஆச்சார்யாள் (ஸ்ரீஆதிசங்கரர்) சௌந்தர்ய லஹரியில் இப்படித்தான் விளக்குகிறார்’’ என்று அருளினார் காஞ்சி மகான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT