Last Updated : 01 Nov, 2017 11:29 AM

 

Published : 01 Nov 2017 11:29 AM
Last Updated : 01 Nov 2017 11:29 AM

ஐப்பசி பிரதோஷ நன்னாளில்... தென்னாடுடைய சிவனை வணங்குவோம்!

இன்று பிரதோஷம்!

சிவனாரை வழிபடுவதற்கு எத்தனை எத்தனையோ முக்கியமான தினங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நாள்... பிரதோஷம்.

பிரதோஷ தினத்தில், சிவாலயம் செல்வதும் பிரதோஷ வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான தருணத்தில், சிவனாரையும் நந்திதேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பான ஒன்று என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இன்று நவம்பர் 1ம் தேதி, ஆங்கில மாதத்தின் துவக்க நாள். ஐப்பசி மாத பிரதோஷ நன்னாளும் கூட. இந்த அற்புதமான நாளில், மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, நந்திதேவரையும் சிவனாரையும் தரிசியுங்கள். மனோபலம் கிடைத்து மகோன்னதமாக வாழலாம்!

முடிந்தால், அபிஷேகத்துக்குத் தேவையான பொருட்களை வழங்கலாம். வில்வம் வழங்குங்கள். வாழ்வில் நிம்மதியுடன் வாழ்வீர்கள். தயிர்சாதம் அன்னதானமாக வழங்குவது இன்னும்  பலம் சேர்க்கும். பசுவுக்கு உணவிடுங்கள். சந்ததி சிறக்க வாழலாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி.

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x