Last Updated : 08 Nov, 2017 10:20 AM

 

Published : 08 Nov 2017 10:20 AM
Last Updated : 08 Nov 2017 10:20 AM

ஒளிமயமான வாழ்க்கைக்கு தீபமேற்றி வழிபடுவோம்!

ஒரு சின்ன அகல் விளக்கின் வெளிச்சம் கூட, இருளையும் மன இருளையும் அகற்றவல்லது என்பது நமக்குத் தெரியும்தானே. அதேபோல், ஆலயங்களுக்குச் செல்லும் தருணங்களில், விளக்கேற்றி இறைவனை வணங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆச்சார்யப் பெருமக்கள் அறிவுறுத்துகிறார்கள்.

‘நம்மால தினமும் கோயிலுக்குப் போக முடியாது. அப்படியே போற போது, விளக்கேத்தறதுங்கறது, அந்தக் கூட்டத்துல ரொம்பவே சிரமம். அதனால மனசுக்கு எப்பத் தோணுதோ, அப்ப கோயில்ல விளக்கேத்துவேன்’ என்று சொல்பவர்களும் உண்டு. இதில் தவறொன்றுமில்லை.

அதை விட முக்கியமானதாக, ஒரு விளக்கை எரிப்பதற்குக் கூட வசதியில்லாத கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. அந்தக் கோயில்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, மாதந்தோறும் விளக்குத் திரி, எண்ணெய் ஆகியவற்றைத் தானமாக வழங்கி, புண்ணியம் தேடிக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ,

தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு என்று தெரிவிக்கின்றன ஆகம சாஸ்திரங்கள்!

ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் அனைத்தும் விலகும்!

ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் லகிவிடும். தீயசக்திகள் அண்டாது.

12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி விடும்.. எதிரிகள் ஒழிவார்கள். எதிர்ப்புகள் அழியும். 18 தீபங்கள் ஏற்றி, பகவானை வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும்! சுபிட்சமும் அமைதியும் சந்தோஷமும் நிம்மதியும் வீட்டில் நிறைந்திருக்கும்!

27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திரங்களால் உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும்.

48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடனும் சிறப்புடனும் வாழலாம்! சகல சம்பத்துகளுடனும் ஐஸ்வரியங்களுடனும் குறைவின்றி பேரும் புகழுமாக வாழ்வது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x