Last Updated : 05 Jul, 2023 07:25 PM

 

Published : 05 Jul 2023 07:25 PM
Last Updated : 05 Jul 2023 07:25 PM

சிங்கம்புணரியில் பிரமாண்ட மல்லிகை பூப்பல்லக்கில் சேவுகப்பெருமாள் அய்யனார் வீதி உலா

சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோயில் பூப்பல்லக்கு வீதி உலாவில் பங்கேற்ற பக்தர்கள்.

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிரமாண்ட மல்லிகை பூப்பல்லக்கு சேவுகப்பெருமாள் அய்யனார் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 1-ம் தேதி நடைபெற்றதால், வைகாசி திருவிழா ஆனி மாதத்தில் நடைபெற்றது.

இத்திருவிழா ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஜூன் 29-ம் தேதி திருக்கல்யாணம், ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு கழுவன் விரட்டும் திருவிழா, ஜூலை 3-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றன. இன்று அதிகாலை பூப்பல்லக்கு வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு மல்லிகைப்பூ, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூரணை, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளினர். விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், பிடாரி அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பூப்பல்லக்கு நான்கு ரத வீதிகளில் உலா வந்து, அதிகாலை 5 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மல்லிகைப்பூ வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x