Published : 31 Oct 2017 11:14 AM
Last Updated : 31 Oct 2017 11:14 AM
பொதுவாகவே, ராகுகால வேளையில், துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக, எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டின் சின்னச் சின்னக் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பார்கள்.
அம்பாளுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் செல்லுங்கள். கோஷ்டத்தில் துர்கை கோஷ்ட தேவதையாகக் காட்சி தருவாள். அதேபோல், அம்மன் கோயில்களில், துர்காதேவி கோஷ்டத்திலும் இருப்பாள். சில கோயில்களில் தனிச்சந்நிதியாகவும் வீற்றிருப்பாள்.
இன்னும் சொல்லப் போனால், அம்பாளின் அம்சமே துர்காதேவி. எனவே எந்த அம்மனாக இருந்தாலும், இன்று செவ்வாய்க்கிழமையான ராகுகால வேளையில், அதாவது மாலை 3 முதல் 4.30 மணி வரையிலான ராகுகாலத்தில், ஆலயம் சென்று, தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை தீபமேற்றுங்கள். முடிந்தால் செந்நிற மலர்களை அணிவிக்கச் செய்து அழகு பாருங்கள்.
வீட்டின் கஷ்டங்களும் துக்கங்களும் பறந்தோடும். சந்தோஷம் வீட்டில் நிரந்தரமாகக் குடிகொள்ளும். நம் அன்னையைப் போல் நம்மைக் காத்தருள்வாள் அன்னை சக்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT