Last Updated : 30 Oct, 2017 02:43 PM

 

Published : 30 Oct 2017 02:43 PM
Last Updated : 30 Oct 2017 02:43 PM

ஆதிசேஷன் வழிபட்ட சிவன்! சர்ப்பதோஷம் போக்கும் நாகநாதர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் - ஸ்ரீநாகராஜ ஸ்வாமி. நாகராஜன் பூஜித்து அருள்பெற்றதால், இந்தக் கோயிலின் ஈஸ்வரனுக்கு ஸ்ரீநாகேஸ்வரர் என்றும் நாகநாதர் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

பூமியை தாங்கிக்கொண்டிருந்த ஆதிசேஷன்...மக்களின் பாவ பாரம் அதிகமானதால், பூமியைச் சுமக்க முடியாமல் வருந்தினார். உடல் சோர்வு நீங்கவும், புது சக்தி பெறவும் சர்வேஸ்வரனை வேண்டினார்.

அதையேற்று, ஆதிசேஷனுக்கு... அவரின் ஒரு தலையாலேயே பூவுலகைத் தாங்கும் பேராற்றலைத் தந்தாராம் சிவனார். ஆதிசேஷன் களிப்புற்றார். பிரம்மதேவன் வேதவித்துகளை இட்டுவைத்த கும்பம், வெள்ளத்தில் மிதந்து வந்ததல்லவா? அதிலிருந்த வில்வம் விழுந்த இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபெரியநாயகி.

சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில், சூரியக் கதிர்கள் ஸ்ரீநாகேஸ்வரரின் மீது விழுந்து வழிபடுவதைக் காணலாம். ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு கால நேரத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், சகல நோய்களும் தீரும். ஆயுள் நீடிக்கும். ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வந்து வழிபட, தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். காலசர்ப்ப தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x