Published : 19 Oct 2020 05:35 PM
Last Updated : 19 Oct 2020 05:35 PM
தன்னைத் தல என்று குறிப்பிட்ட ரசிகருக்கு என்றும் ஒரே தலதான். அதுதோனிதான் என்று கே.எல்.ராகுல் பதிலளித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின் 36-வது போட்டியில் பஞ்சாப், மும்பை இரு அணிகளின் ஸ்கோரும் 176/6 என்று டை ஆனது. அப்போது முதல் சூப்பர் ஒவருக்கு ஆட்டம் சென்றது. கிங்ஸ் லெவன் பேட் செய்தது. கே.எல்.ராகுல், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா பேட்டிங் பொறுப்புகளை ஏற்றனர்.
ரியல் டைமில் பிரமாதமாக வீசிய ஜஸ்பிரித் பும்ரா (3/24), மும்பை இந்தியன்ஸ் சூப்பர் ஓவர் சுமையை ஏற்றுக் கொண்டார். ராகுல் சிங்கிள் எடுக்க அடுத்த பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்த 3 பந்துகளில் பும்ராவை ஒன்றும் செய்ய முடியவில்லை. 4 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. கடைசிப் பந்து ராகுலுக்கு துல்லிய யார்க்கர் வீசி பும்ரா எல்.பி. ஆக்க ஸ்கோர் 5/2 என்று ஆனது.
மும்பை ஒரு பந்தில் முடித்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, ரோஹித் சர்மா, டி காக் இறங்கினர். கிங்ஸ் லெவன் சூப்பர் ஓவர் சுமை ஷமியிடம் அளிக்கப்பட்டது. ஷமி தன் கடமையைச் சிறப்பாகச் செய்து முதல் 4 பந்துகளில் 3 ரன்களையே கொடுத்தார். யார்க்கர் மேல் யார்க்கர்களாக வீசினார்.
கடைசிப் பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை எனும் போது 2-வது ரன்னை ஓடும் முயற்சியில் டி காக் ரன் அவுட் ஆக ஆட்டம் மீண்டும் 5 ரன்கள் என்று டை ஆனது. கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக மிகவும் பிரில்லியண்ட் ஆக டைவ் அடித்து முன்னால் பாய்ந்து பந்தை ஸ்டெம்புக்குள் தட்டி ரன் அவுட் செய்தார்.
2-வது சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இப்போட்டியில் கே.எல்.ராகுலின் ஆட்டத்தைப் பாராட்டிய ரசிகர், அவரைத் தன் தல என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல் அந்த ரசிகருக்குப் பதில் அளித்தார்.
இதுகுறித்து கே.எல்.ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ என்றும் ஒரே தலதான். அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும்” என்று பதிலளித்தார்.
There is only one Thala Gajal and everyone knows who he is.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT