Published : 08 Oct 2020 12:25 PM
Last Updated : 08 Oct 2020 12:25 PM
திரிபாதியின் டாப் கிளாஸ் பேட்டிங், வருண், ரஸல், நரேன் ஆகியோரின் நெருக்கடி தரும் அபாரமான பந்துவீச்சு ஆகியவற்றால் அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் மோசமாக விளையாடிய சென்னை வீரர் கேதர் ஜாதவை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
CSK கார்த்திக் ™
ஜாதவைவிட இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் தோனிதான்.
Dr.ஜெயசீலன்
ஜாதவ்: ஆப்போசிட் டீம்ல ஒரு ஆள் வரலையாம்! நான் வேணும்னா பொதுவா நிக்கட்டுமா?
Jennifer Dr
ஜாதவ் உள்ள வரப் போறான் ! அவன அவுட் எடுக்காதீங்க... எடுத்தா நாம தோத்துடுவோம்... ஓவர்... ஓவர்.
கேபிள் ராஜா
ரெண்டு மேட்ச்சாதான் வாட்சன் பார்ம்ல வர்றார்... அடுத்து தோனி வந்து அப்புறம் ஜாதவ் வந்து.... அதுக்குள்ள ஐபிஎல் முடிஞ்சிருமேடா!
ரசனய்
7.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினதுக்கு ஜாதவ் இன்னிக்குதான் கரெக்டா சோலி பார்த்திருக்கான்.
mohanram.ko
கேதர் ஜாதவ் நவ்- கேகேஆர் டீம்ல ஒருத்தன் சொன்னான், இவன் எப்படி பால் போட்டாலும் அடிக்கமாட்றான், இவன் ரொம்ப நல்லவன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டான்டா.
மித்ரன்
ஜாதவ் - என்ன டி.கே. தோத்துருவோமோனு பயந்துட்டீங்களா?
Joe Selva
ஜாதவ் அடிக்கல அடிக்கலன்னு எல்லாரும் குறை சொல்றோம். ஆனால், அந்த அடிக்காத ஜாதவை இவ்வளவு நாளா டீம்ல வைச்சது யாரு தப்பு?
உள்ளூராட்டக்காரன்
என்னமோ மூணு பாலுக்கு அப்புறம் சிக்ஸா அடிக்க போற மாதிரி ஃபீல்டர்ஸை எண்ணுற?
ஜாதவ்: நான் பாட்டுக்கு எண்ணுறேன், நீ பாட்டுக்கு பவுலிங் போடு.
குண்டு பையன்
ஜாதவ் டூ ஜடேஜா... ஓடி வருவேன்னு நினைச்சியா தாஸ்...
தனி ஒருவன்ᴹᴵ
கில்லினே நீங்க, நாங்க தோக்க வேண்டிய மேட்ச்ச நீங்க ஜெயிக்க வெச்சிட்டீங்க. உங்க கேப்டன்ஷிப்பைப் புரிஞ்சிகவே முடியலண்ணே. அதுவும் உங்க தம்பி ஜாதவ் உங்களையே மிஞ்சிட்டான்...
Murugesan
ஜாதவ் இருக்கிறவரை CSKவுக்கு விடிவே இல்லை. நேற்று தோற்றதற்கு ஜாதவே முழு காரணம்
Adheera
நான் ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கன்...அந்த ஜாதவை எடுக்காதீங்க எடுக்காதீங்கன்னு...
vijayakumar
ஜாதவ்: சரி தல.. ஆனது ஆகிடுச்சி.. அடுத்த மேட்ச்சுக்கு எப்போ பிராக்டிஸ் வர்றது..
ஆல்தோட்டபூபதி
லெக் சைடுல ஆளெல்லாம் எண்ணி பார்த்தியேடா. ஆனா, கவர்ஸ்ல டொக்கு வச்சியேடா.. விடிஞ்சாக்கூட உன் விடியா மூஞ்சி தான்டா நினைவுக்கு வருது..
KXIP சேட்டு
ஆக்சுவலி அவன் என்ன ஃபோர் எல்லாம் போகுதுன்னு தான் பேட்ட மாத்திருக்கான். ரன் அடிக்க மாத்தல ப்ரண்ட்ஸ்
Hades
தோனியே தான் எல்லா சீசனும் கடைசில ஆடி ஜெயிச்ச குடுக்கணும்னா மத்தவனெல்லாம் எதுக்கு இருக்காங்க. போங்கடா டேய். இந்த மேட்ச் தோத்ததுக்கு ஜாதவ்தான் முழுக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment