Published : 21 Jul 2020 09:55 PM
Last Updated : 21 Jul 2020 09:55 PM

திருமணமாகும் மகனுக்குச் சமையல் குறித்து பாடம் எடுத்த தாய்: வைரலாகும் செய்முறைப் படம் 

விரைவில் திருமணமாக உள்ள தன் மகனுக்கு, சமையல் குறித்து நூதன முறையில் பாடம் எடுத்த தாயின் செய்முறைப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆண்கள் என்றாலே சமையலுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்ற நிலைதான் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது. இந்தச் சூழல் மெல்ல மெல்ல மாறிவந்தாலும் திருமணமாகும் முன் சமைக்கத் தெரிந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு.

இந்நிலையில், விரைவில் திருமணமாகவுள்ள மகனுக்கு, உளுந்தம் பருப்பு எது? துவரம் பருப்புக்கும் பாசிப் பருப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சாம்பாரில் எந்தப் பருப்பு போடுவார்கள் என்றெல்லாம் வகுப்பெடுக்க நினைத்தார் ஒரு தாய்.

ஒருநாளில் புரிந்துவிடாது என்பதை உணர்ந்தவர், அனைத்துப் பருப்பு வகைகளிலும் சிறிதளவை எடுத்துச் சேகரித்து, நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி, அதற்குக் கீழே பெயரையும் எழுதிக் கொடுத்துவிட்டார்.

இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு காப்ரா, முனைவர் சயானிகா உனியல் பாண்டா உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 2 Comments )
  • S
    S. chandran

    நல்லவிசயம்தான்

  • V
    Valliappan Al

    ஆண் பெண் என்றில்லாமல் அனைவருக்கும் சமையல் கற்று கொடுப்பது அவசியம்.சமையல் பெண்பாலரை சேர்ந்தது எனும் எண்ணமே தவறு .. சிறந்த சமையலுக்கு நலன்தான் சொல்லப்படுகிறார். தொலைக்காட்சியில், சமையல் தொடரை முதலில் நடத்தியவர் தாமு அவர்கள்.

 
x
News Hub
Icon