Published : 18 Apr 2020 05:14 PM
Last Updated : 18 Apr 2020 05:14 PM

ட்விட்டரில் ட்ரெண்டாகும் 20 வயதுப் புகைப்படங்கள் - #MeAt20 சவால்

சமூக ஊடகங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகும் சவால்கள் வரிசையில் தற்போது #MeAt20 என்ற சவால் ட்ரெண்டாகியுள்ளது. இது பொது மக்களோடு சேர்த்து பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்து அவர்களையும் பங்கெடுக்க வைத்துள்ளது.

இந்தியாவில் கரோனா ஊரடங்கால் திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். காவல்துறையினர், மருத்துவத்துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே தினமும் பணிபுரிந்து வருகிறார்கள்.

மேலும், அவ்வப்போது சில ஹேஷ்டேக்கள் ட்ரெண்ட்டாகும். அது மிகவும் வைரலாகி, ட்விட்டர் பயனர்கள் அனைவருமே அதை பயன்படுத்தத் தொடங்குவர். இந்த ஹேஷ்டேக் சவால், ஐஸ் பக்கெட் சவாலைப் போல தலையில் சில்லென்ற தண்ணீரை ஊற்றிக் கொள்வது கிடையாது. மிக எளிமையான சவால் தான். உங்கள் 20வது வயதில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்ற உங்கள் புகைப்படத்தை #MeAt20 என்ற ஹாஷ்டேக்குடன் பகிர்ந்தால் போதும்.

முன்னதாக இதே போல, ட்விட்டரில் 10 வருட சவால் என, பயனர்கள், பத்து வருடங்களுக்கு முந்தைய தங்களது புகைப்படங்களைப் பகிரும் சவால் ட்ரெண்டானது நினைவுகூரத்தக்கது

இந்த சவாலை ஒருவகையில் ஆரம்பித்து வைத்தது @202natt என்ற ட்விட்டர் பயனர். ஏப்ரல் 13 தேதி இதை அவர் ஆரம்பித்தார். நீங்கள் அனைவரும் 20 வயதில் எப்படி இருந்தீர்கள் என்று அவர் பதிவிட அந்த ட்வீட் பிரபலமானது. 2000 லைக்குகளையும், 1,000 பதில்களையும் இந்த ட்வீட் பெற்றுள்ளது.

மற்ற சவால்களைப் போல உங்களை யாரும் இதில் டேக் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த சவாலை எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சவால் நன்றாக இருக்கிறதே என்று பலரும் தங்களுடைய 20 வயது புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

நண்பர்கள் குழுவினரோ 'இப்படியா 20 வயதில் இருந்தாய்' என்று கிண்டல் செய்து மகிழ்ந்து வருகிறார்கள். மேலும், சிலர் 20 வயது புகைப்படத்தைப் பகிர்ந்து, அந்தப் புகைப்படத்தின் நினைவலைகளையும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#Meat20 ஹேஷ்டேக்கில் குவிந்து வரும் ட்வீட்களில் சில:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x