Published : 15 Nov 2019 06:51 PM
Last Updated : 15 Nov 2019 06:51 PM
டெல்லி காற்று மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்க நேரம் இல்லை. ஆனால், கவுதம் கம்பீர் இந்தூரில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையே முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண், கவுதம் கம்பீருடன் இந்தூரில் கடை ஒன்றில் மகிழ்ச்சியாக ஜிலேபி சாப்பிடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது இப்படம் சர்ச்சையாகியுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜகவின் நாடாளுமன்ற எம்.பி.யுமான கவுதம் கம்பீர் டெல்லி காற்று மாசு தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் தற்போது இந்தூரில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளது. லக்ஷ்மண் பதிவிட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, டெல்லி காற்று மாசால் துன்பப்படும்போது கம்பீர் இந்தூரில் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று ஆம் ஆத்மி பதிவிட்டுள்ளது.
மேலும், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பலரும் டெல்லி மாசு குறித்த கூட்டத்தில் பங்கேற்க, பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் நேரம் ஒதுக்காதது விமர்சிக்கதக்கது என்று சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர்.
மேலும் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக்கையும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கவுதம் கம்பீருக்கு எதிராக இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Kabhi pohe se teekhe, kabhi jalebi se meethe ... wonderful start to the day in Indoor, where we had breakfast outdoor
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT