Published : 17 Oct 2019 01:52 PM
Last Updated : 17 Oct 2019 01:52 PM
கேரளாவைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் ஒருவரின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றிக்கொண்டது. இதனை அப்புறப்படுத்தி சக தொழிலாளர்கள் அவரை மீட்டனர்.
கேராளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு அணை அருகே உள்ள புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் துப்புரவுப் பணியாளரான 61 வயதான பூரணசந்திரனும், அவரது சக தொழிலாளர்களும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு 10 அடி நீளத்தில் மலைப்பாம்பைக் கண்ட பூரணசந்திரன் அதனைக் கவனமாகப் பிடித்தார். ஆனால், அந்த மலைப்பாம்பு அவரது பிடியிலிருந்து நழுவி அவரது கழுத்தைச் சுற்றியது. பின்னர் அந்த மலைப்பாம்பு அவரது கழுத்தை நெருக்க ஆரம்பித்தது. இதனால் பூரணசந்திரன் சத்தம் போட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு ஓடி வந்த சக தொழிலாளர்கள் அந்த மலைப்பாம்பை அப்புறப்படுத்தி, அவரை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பூரணசந்திரன் கழுத்திலிருந்து மலைப்பாம்பை தொழிலாளர்கள் அப்புறப்படுத்திய வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.
#WATCH Kerala: A man was rescued from a python by locals after the snake constricted itself around his neck in Thiruvananthapuram, today. The snake was later handed over to forest officials and released in the forest. pic.twitter.com/uqWm4B6VOT
— ANI (@ANI) October 16, 2019
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT