Published : 26 Sep 2019 06:12 PM
Last Updated : 26 Sep 2019 06:12 PM
தேனியில் நியூட்ரினோ ஆயவகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரத்தில், ஐநா சபையால் உலகப் பாரம்பரியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில், பல லட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, மத்திய அரசு 'நியூட்ரினோ ஆய்வகம்' அமைப்பதை எதிர்த்து விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் செய்ததுடன் இது தொடர்பான மீம்ஸ்களையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் இயங்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 'பிகில்' இசை வெளியீட்டு விழா நிகழ்வில் நடிகர் விஜய் தனது ரசிகர்களிடம், ''தேவையில்லாத சண்டைகளைத் தவிர்த்து ட்ரெண்டிங்கை சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீ மரணத்துக்கு நியாயம் கேட்டும், கீழடி அகழாய்வு குறித்தும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT