Published : 20 Sep 2019 06:19 PM
Last Updated : 20 Sep 2019 06:19 PM
உலகம் முழுவதும் போலிச் செய்திகளைப் பதிவிட்ட ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
செய்திகளை அறிந்து கொள்வதில் சமூக வலைதளப் பக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் எந்த அளவு சாதகம் இருக்கிறதோ அதே அளவு பாதகமும் இருந்து வருகிறது.
இதற்கு சமீபத்தில் பரவும் போலிச் செய்திகளையே உதாரணமாகக் கூறலாம். இது மக்களிடம் தவறான கருத்தைப் பரப்பலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இணையத்தில் பரவும் போலிச் செய்திகளைத் தடுக்க ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக போலிச் செய்திகளைப் பரப்பிய சுமார் ஆயிரம் கணக்குகள் மூடப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
எகிப்து, ஹாங்காங், சீனா, ஸ்பெயின், இக்வேடார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் போலிச் செய்திகள் பரப்பிய கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் குறித்து கருத்து வேறுபாடு விதைக்க முயன்ற, சீனாவைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட 4,302 கணக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT