Published : 27 Aug 2019 12:53 PM
Last Updated : 27 Aug 2019 12:53 PM

மாணவர்களின் மனதை வென்ற ஒடிசா ஆசிரியர்

ஒடிசாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு நடனம் ஆடி, பாடம் கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.

பள்ளி கல்வியை மாணவர்கள் சிரமமாக பார்க்க வைக்கும் இக்காலக் கட்டத்தில், ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு இடையேயான உறவில் நட்பு இடம்பெறுவது அரிதாகிவிட்டது. எனினும் சில ஆசிரியர்கள் கற்பித்தலில் புதுமைகளை புகுத்தி
மாணவர்களிடையேயான நட்புறவை புதுப்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருக்கிறார் ஒடிசாவைச் சேர்ந்த பிரஃபுல்லா குமார். 56 வயதான இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலில் நடனம், பாட்டு என தனது தனித்துவமான பாணியை புகுத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது அனைவராலும் அறியப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து பிரஃபுல்லா குமார் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் கூறும்போது, “ நான் வகுப்பறையில் நுழைந்ததும் மாணவர்கள் உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை செய்து உற்சாகப்படுத்துவேன். மேலும், பாடங்களை நடனம், பாடல் அசைவு மூலம் கற்பிப்பேன். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வருகின்றனர்” என்றார்.

சமூக வலைதளங்களில் பிரஃபுல்லா குமாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x