Last Updated : 25 Sep, 2018 11:14 AM

 

Published : 25 Sep 2018 11:14 AM
Last Updated : 25 Sep 2018 11:14 AM

அதிக நீர்ப் பராமரிப்பு தேவைப்படும் பயிர் சாகுபடிக்காக காத்திருப்பதா?: மாற்றி யோசிக்கும் சில டெல்டா விவசாயிகள்

காவிரியையே நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வானம் பொழியும் சமயங்களில் கொஞ்சம் பயன்படுத்திக்கொள்வோம். பூமியில் ஊறும் தண்ணீரைக் கொண்டு துல்லிய விவசாயம் செய்து வாழ முடியும் என்கிறார் மாரிமுத்து.

காவிரி டெல்டாவில் நெல் விவசாயம் நடைபெறும் பகுதியில், மன்னார்குடியில் மஞ்சள் சாமந்தியை பயிரிட்டு வருகிறார் கே.மாரிமுத்து. நெற்பயிர்களுக்கு நடுவே, மாலை கட்டுவதற்கு தேவைப்படும் மலர்க் கன்றுகளை பயிரிடத் தொடங்கும்போது, பலரும் இவரை எச்சரித்தனர் ''தேவையில்லாத வேலையில் இறங்குகிறாய் நஷ்டப்படப் போகிறாய்'' என்றெல்லாம் பயமுறுத்தினர்.

"ஆனால் நான் அவர்கள் சொல்வது தவறு என்று நிரூபித்தேன். நான் இச்சாகுபடியில் எட்டு டன் பூக்களை அறுவடை செய்திருந்ருக்கிறேன், எதிர்பார்த்ததோ வெறும் மூன்று முதல் ஐந்து டன் வரை மகசூல்தான் "என்று மாரிமுத்து மிகச்சாதாரணமாக சொல்லும்போது நம்மையறியாமல் நம் புருவங்கள் உயர்கின்றன.

ஏற்கெனவே கோழிகொண்டை பூ கொம்பு மலர், மல்லிகை மற்றும் சம்பங்கி போன்ற மலர்களையும் பயிர்செய்த அனுபவம் உண்டு இவருக்கு. மாலை கட்டுபவர்கள் தஞ்சாவூருக்கும் திருச்சிக்கும் சென்றுதான் மலர்களை வாங்கிவருகிறார்கள். இந்த பரிசோதனை முயற்சியினால் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்வதோடு போக்குவரத்து செலவையும் மிச்சப்படுத்துகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மலர்சாகுபடிக்கு நிறைய நீர்பிடிக்கும் என்று தெரிந்தவர்தான் மாரிமுத்து. அதனாலேயே இதற்கென்று சொட்டுநீர்ப்பாசனம் என்ற மாற்றுவழியைத் தேடிக்கொண்டுள்ளார் இவர்.

இதனால் நெல் சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரில் 80% நீர் மிச்சம் பிடிக்கமுடிகிறதென்பது இவரது அனுபவம். ஓசூர் விவசாயிகளிடமிருந்து பூங்கன்றுகள், எருக்களை வாங்கி மலர்சாகுபடியில் இறங்கியுள்ள மாரிமுத்து ''இதில் லாபமும் மிக அதிகம்.

ஒரு ஏக்கரில் ரூ.20 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. ஆள்கூலி, பூச்சிக்கொல்லி, உரங்கள் உட்பட அனைத்து செலவினங்கள் போக சாமந்திப்பூ எனக்கு ரூ.1 .5 லட்சத்தை சாம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.''

மலர் சாகுபடி என்றால் ஏதோ பெரிய கரும்பு விவசாயம் போன்ற மிகப்பெரிய வேலையெல்லாம் இதற்கு தேவையில்லை. மிகமிக எளிய முறையிலான வேலைகளையே இதற்கு தேவைப்படுகிறது.

''25 நாட்களே ஆன பூங்கன்றுகளை நட்டு 60வது நாளிலிருந்து சாகுபடி தொடங்கி விடுகிறது. 120 நாட்கள் வரை இந்த சாகுபடி தொடர்நதாலும் பூக்கள் பூப்பது 145 நாள்வரைகூட தொடரும். ஒரே பிரச்சனை மழை. ஆரம்ப நாட்களில் நாற்றுபிடிக்கும் காலங்களில் மழை தேவை. மழையிருந்தால் பூங்கன்றுகள் வாடாமல் காப்பாற்றப்பட்டுவிடும். அதிக மழையும் ஆபத்து என்பதால் சற்று கவனமாக இருக்கவேண்டும்.

இத்தகைய பரிசோதனைகளுக்கிடையில் தான் நாம் தோட்டக் கலையைக் கற்றுக்கொள்கிறோம் சில விவசாயிகள் என்னைத் தேடி வந்தனர். தற்போது நான்செய்துவரும் முறைகளைப் பின்பற்றி அவர்களும் பூங்கிளைகளை வாங்கிச்சென்று பயிரிடத் தொடங்கியுள்ளனர்'' என்று புன்முறுவலோடு சொல்லி மகிழ்கிறார்.

இன்னொரு நம்பிக்கை விவசாயி

இன்னொரு நம்பிக்கை தரும் விவசாயி ராஜா. இவர் ஏற்கெனவே இஸ்ரேல் விவசாய வல்லுநர்களிடம் இதுகுறித்து ஆலோசனைப் பெற்று திரும்பி, மிகப்பெரிய இஸ்ரேலிய முறையான கயிறு நீர்ப்பாசனம் என்ற திட்டத்தை செயல்படுத்தி நீடாமங்கலம் பகுதியில் விவசாயம் செய்து வருபவர்.

''காவிரி தண்ணீரை மறந்துவிட வேண்டும். பருவநிலை மாற்றம் மிகப்பெரிய காரணி எனும்போது பெரிய அளவு நீரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பது கால விரயம்தான். என்கிறார் ராஜா,

நீடாமங்கலம் பகுதி விவசாயிகளின் மனப்பான்மையை மாற்ற வேண்டிய ஒரு தேவை இருக்கிறது என்கிறார் இவர். பருத்தி எடுக்க ஆள்பற்றாக்குறை என்ற நிலையிலும் பருத்தி விளைச்சலை தொடர்ந்து வெற்றிகரமாக சாத்தியப்படுத்த முடிந்ததற்கு முதல் காரணம் மாற்று விவசாயத்தில் வைத்த நம்பிக்கைதான் என்கிறார்.

துல்லிய விவசாயம்

கோவில்வெண்ணி பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் அரசாங்கம் நெல்கொள்முதல் மையங்கள் எப்போது திறக்கும் என்று காத்துக் கிடக்கின்றனர். அதேநேரம் படிப்படியாக இடைத்தரகர்களிடம் அரைகுறையான விலைக்கு தங்கள் விளைச்சலைக் கொடுத்து இரையாகி வருகின்றனர்.

''அதிக உரத்தைப் போட்டு ஏற்கெனவே நமது மண்ணை சாகடித்து விட்டோம். இனி பயறு வகைகள், பருத்தி மற்றும் மலர்கள் போன்ற மாற்றுப் பயிர்களைத் தேர்ந்தெடுப்போம். அவை மண்ணை புத்துயிர் பெறச் செய்ய உதவும்.'' என்று நம்பிக்கை விதைகள் ராஜாவின் சொற்களிலிருந்து விழத் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x