Published : 10 Mar 2018 11:42 AM
Last Updated : 10 Mar 2018 11:42 AM
நா
கை மாவட்டம் பொறையா ரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொல்லியல் அருங்காட்சியகம் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சான்றுகளை தெரிவிக்கிறது.
இந்த தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட் கள் எல்லாம், இந்த கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களால் சுற்றுவட்டாரத்தில் நடத்தப்பட்ட கள ஆய் வில் கண்டெடுக்கப்பட்டவை.
இந்த அருங்காட்சியகம் உருவான கதையை துறைத்தலைவர் பேராசியர் ஆர்.சாமுவேல் சந்தோஷம், நம்மிடம் கூறும்போது, “ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலம் பல்வேறு வரலாற்று சிறப்புகளைப் பெற்றது. தில்லையாடி, தலைச்சங்காடு, தி.மணல்மேடு, காரைக்கால் மாவட்டம் மாதூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வரலாற்றுத்துறை மாணவர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதுமக்கள் தாழி, ஈமக்கிரியை தாழி, அதனுள் உள்ள மண்டை ஓடுகள், எலும்புத் துண்டுகள், மட்பாண்டங்கள், கீறல் குறியீடுகளுடன் கூடிய மட்பாண்டங்கள், இரும்பினாலான சிறிய ஆயுதங்கள் உள்ளிட்ட சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் கிடைத்தன. புதிய கற்கால, இரும்பு கால மட்பாண்டங்கள் உள்ளன. அவற்றை அப்படியே சேகரித்து 2002-ல் அருங்காட்சியம் அமைத்தோம்” என்றார்.
உதவி பேராசிரியர் ஜே.செல்வராஜ் கூறும்போது, “இந்த அருங்காட்சியகத்தால் மாணர்களுக்கு தொல்லியல் துறை மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படுகிறது. கள ஆய்வின்போது ஒரு பானையிலிருந்து கருப்பு நிறத்திலான விதைகள் கிடைத்தன. அவற்றை லண்டனில் உள்ள ஆராய்ச்சி மையம், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை, கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஆய்வுக்கு அனுப்பினோம்.
ஆய்வு முடிவில் அவை ‘பேய்க் குமுட்டி’ எனும் விதைகள் என்பதை அறிய முடிந்தது. கெட்ட ஆவிகள் அணுகாமல் இருப்பதற்காக இவை தாழிகளுக்குள் வைக்கப்பட்டிருகலாம் என கருதப்படுகிறது. அந்த விதைகள் கெட்டுப் போகாமல் இன்னும் அப்படியே உள்ளதுதான் ஆச்சரியம். அரிதி லும் அரிதானது இந்த விதை” என்றார்.
வெளியிடங்களிலிருந்து தருவிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு பல கல்லூரிகளில் அருங்காட்சியம் அமைக்கப்படும். ஆனால் இக்கல்லூரியில் உள்ள பொருட்கள் அனைத்துமே மாணவர்களால் கண்டெடுக்கப்பட்ட வை. பல கல்லூரிகளில் அருங்காட்சியகம் அமைவதற்கு இதுதான் முன்னோடியாகவும் இருந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT