Published : 31 May 2019 02:56 PM
Last Updated : 31 May 2019 02:56 PM
கோடை முடிந்து விரைவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கப்போகிறது. ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் என பெரும்பாலான நீராதாரங்கள் வறண்டு கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவற்றில் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. இந்நிலையைச் சரியாக்க நாம் என்ன செய்யலாம்?
இந்திய சுற்றுச்சூழலியலாளர் அறக்கட்டளை (EFI) இதற்கான தொடக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. கடந்த 8 வருடங்களாக சூழலியல் சார்ந்து இயங்கிவரும் இஎஃப்ஐ, தற்போது நீராதாரங்களைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதில் சென்னை, கோயம்புத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் இஎஃப்ஐ அமைப்புடன் இணைந்து பணியாற்றத் தன்னார்வலர்களும் அவர்களை ஒருங்கிணைக்க ஆட்களும் தேவைப்படுகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய இஎஃப்ஐ அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி, ''நீர்நிலைகளில் குவிந்துகிடக்கும் மட்காத நெகிழிக் குப்பைகளை அகற்றுவதே எங்களின் முதன்மை இலக்கு. நாம் அனைவரும் சேர்ந்து முயற்சித்தால் இது சாத்தியமாகும்.
அகற்றப்படும் குப்பைகள் அனைத்தும் அந்தந்த ஊர்களின் நகராட்சி, மாநகராட்சிக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும். இதற்காக அரசிடம் ஏற்கெனவே முறையாக அனுமதி பெற்றுவிட்டோம்.
ஜூன் 2-ம் தேதி காலை 7- 9 மணி வரை இந்த பணி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3,000 தன்னார்வலர்கள் கலந்துகொள்கின்றனர். முதலில் பெரிதாக ஆரம்பித்து, வாராவாரம் இதே பணியைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
தன்னார்வலர்களுக்குத் தேவையான கையுறைகளும், குப்பைகளைச் சேகரிக்க பைகளும் வழங்கப்படும். குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நாம் எங்கோ வீசிப்போட்ட குப்பைதான் கடலில், நீர்நிலைகளில் நிறைந்து கிடக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் விருப்பம் உள்ள அனைவரும் எங்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றி, நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார்.
கீழ்க்கண்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடக்கவுள்ளன.
சென்னை:
ப்ரோக்கன் ப்ரிட்ஜில் இருந்து பெசன்ட் நகர் வரை
அஷ்டலட்சுமி கோயிலில் இருந்து திருவான்மியூர் கடற்கரை வரை
கொட்டிவாக்கம் கடற்கரை
பாலவாக்கம் கடற்கரை
தொடர்புக்கு: 9003065518, 9940203871, 98410 43390
கோயம்புத்தூர்:
கிருஷ்ணாம்பதி ஏரி | தொடர்புக்கு: 96009 54609
புதுச்சேரி
வீராம்பட்டிணம் ஏரி
கனகன் ஏரி
தொடர்புக்கு: 90032 71716, 95519 26066
பெங்களூரு:
தேவஸந்த்ரா மற்றும் ஹெப்பால் ஏரி சுத்தம் செய்தல்
தொடர்புக்கு: 97873 02646
*
திருவனந்தபுரம் - ஷங்குமுகம் கடற்கரை | தொடர்புக்கு: 88915 786936
ஹைதராபாத் - கப்ரா லேக் சுத்தம் செய்தல் | தொடர்புக்கு: 81217 38296
மும்பை - மஹிம் காஸ்வே கடற்கரை சுத்தம் | தொடர்புக்கு: 96771 71276
*
ஜூன் 1, காலை 7 மணி முதல் 8 மணி வரை
புனே: முலா முதா ஆறு சுத்தம் செய்தல் | தொடர்புக்கு: 9940203871
டெல்லி: யமுனை நதிக்கரை சுத்தம் செய்தல் | தொடர்புக்கு: 95993 02044
தொடர்புக்கு: 9787302646 | பதிவு செய்ய: info@indiaenvironment.org
ஆர்வத்துடன் இருக்கும் மக்கள் இதில் இணைந்து, நம் ஊருக்கு நம்மால் ஆனதைச் செய்யலாம், புதர் மேடுகளாகவும், கான்கிரீட் காடுகளாகவும் மாறிவிட்ட நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்க தன்னார்வலர்கள் தயாரா?
தொடர்பு கொள்ள: அர்ஜூன் ஆர்யா- 81217 38296
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT