Published : 02 May 2018 09:56 AM
Last Updated : 02 May 2018 09:56 AM

மதுரையில் ‘ஆன்லைன் நூலகம்’: வீடு தேடி வரும் புத்தகம்

பு

த்தகத்தை வாங்குவதற்கு ஆகும் செலவு, சில சமயங்களில் புத்தக விலையை விட அதிகமாகி விடுகிறது. அதனால் சிலரின் புத்தக வாசிப்பு ஆசை, இணையத்திலேயே முடங்கி விடுகிறது. ஆனால், இன்று வெளியான புத்தகமாக இருந்தாலும், அரை நூற்றாண்டுக்கு முந்தைய புத்தகமாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், அந்த புத்தகத்தை வீட்டுக்கே இலவசமாக டோர் டெலிவரி செய்கிறது மதுரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ரீட்அபிட் மார்டன் நூலகம்’.

நேரடியாகவும் வாசகர்கள் இந்த நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கலாம். விரும்பிய புத்தகங்களை தெரிவித்தால், குறிப்பிட்ட அந்த புத்தகங்களை வாங்கியும் கொடுத்து நம்மை படிக்க வைக்கிறார்கள். இதனை தொடங்கியவர் மதுரை அண்ணாநகர் கோமதிபுரத்தைச் சேர்ந்த டி.எஸ்.கோவர்தனன். எம்பிஏ படித்துள்ள இவர், அடிப்படையில் ஒரு புத்தக வாசிப்பாளர். மகனுக்கும் புத்தகம் வாங்கி கொடுத்து வாசிப்பாளராக்கிய அவருக்கு, ஒரு பெற்றோராக தனது கடைமையை சரியாகச் செய்வதாக திருப்தி.

2 ஆயிரம் நூல்கள்

இதன் தொடர்ச்சிதான் நூலகம் ஆரம்பிக்கும் எண்ணம் உருவாகக் காரணம். உடனடியாக களமிறங்கிய அவர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகத்தை ஆரம்பித்தார்.

அவரைச் சந்தித்தோம். “ஊருக்கு ஊர் நூலகம் இருந்தாலும் மக்களுக் கும் நூலகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. வாசிப்பாளர்களுக்கும் நூலகங்களுக்குமான இந்த இடைவெளியை நிரப்ப எனது நூலகம் பயன்பட வேண்டும் என நினைக்கிறேன். எல்லாமே இணையவழியில் கிடைத்துவிடுவதால் நிறைய பேர் நூலகத்துக்கு வருவதில்லை என தெரிந்தது.

அதேநேரம், புதிய புத்தகங்கள் இன்டர்நெட்டில் கிடைக்காது. இதனால் வாசகர்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அந்த புத்தகத்துக்கான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இலவசமாக டோர் டெலிவரி செய்யும் நூலகத்தை ஆரம்பித்தோம். புத்தகத்தை விலை கொடுத்து வாங்க முடியாவிட் டால் வாசகர் விரும்பும் புத்தகத்தின் 30 சதவீத பணத்தை கட்டணமாக செலுத்தி 30 நாள் அந்த புத்தகத்தை வீட்டில் வைத்து படிக்கலாம். 30 நாள் முடிந்ததும் நாங்களே வீட்டுக்குச் சென்று பெற்றுக் கொள்கிறோம். அதுபோக கட்டணம் வாரியாக மாதம்தோறும் புத்தகங்கள் வாங்கி படிக்கும் வசதியும் உள்ளது. readabit.in என்ற இணைய முகவரியில் புத்தக பட்டியலைப் பார்க்கலாம். புதிய புத்தகம் வாங்குவதற்கு வழிகாட்டுவதற்கு எக்ஸ்பர்ட் கமிட்டியும் உள்ளது”என்கிறார் கோவர்தனன்.

புத்தகங்கள் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் துணையாக இருப்பவை. தேடித் தேடி படித்த காலங்கள் போய், வீட்டில் இருந்தபடியே வாசிக்கும் வசதி கள் வந்துவிட்டன. வாசிப்புக்கான வாய்ப்பு எப்படி இருந்தாலும் என்ன, பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான் நமது பணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x