Published : 12 May 2018 09:59 AM
Last Updated : 12 May 2018 09:59 AM

கின்னஸை நோக்கி பயணிக்கும் ரயில்வே ஓவியர்

வியக் கலை எல்லோருக் கும் வாய்த்துவிடுவதில்லை. கண்ணுக்கும் கருத்துக்கும் பல செய்திகளைச் சொல் லும் அற்புத படைப்பால் உலக அள வில் புகழ் பெற்றவர்கள் பலர். கண்களால் பார்த்து அளந்து, உன்னிப் பாகக் கவனித்து, நிறத்தை தேர்வு செய்து தொடர்ந்து வரைந்து பயின்றால்தான் சித்திரம் கைப்பழக்கமாகும். அந்த வகையில் பள்ளி பருவத்தில் முத்து முத்தான எழுத்துகளால் தொடங்கி, இப்போது ஓராயிரம் ஓவியங்களை வரைந்திருக்கிறார் சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.ஏ.சங்கரலிங்கம்.

தெற்கு ரயில்வேயில் ஓவியர் பணியில் இருக்கும் ஒரேயொரு ஓவியரும் ஊழியரும் இவர்தான். ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் ஏற்படுத்துதல், அதற்கான வாசகங்கள் உருவாக்குதல், போஸ்டர்கள் உருவாக்குவது, ரயில்வே ஊழியர்களுக்கான வாசகங்கள் ஏற்படுத்தி தருவது போன்ற இவரது பணிகள் 34 ஆண்டுகளாக தொடர்கிறது.

ஓய்வு நேரம் எல்லாம் ஓவியங்களை உருவாக்குவது சங்கரலிங்கத்தின் பணியாக மாறிப்போனது. அவரது கற்பனைகள் உயிராக உரு மாறி தத்ரூபமான ஓவியங்களாக பரணமிக்கின்றன. இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை படைத்திருக்கிறார். இப்போது இவ ரது ஓவிய பயணத்தின் அடுத்தகட்ட மாக கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் நம்மிடம் கூறும்போது, ‘‘பள்ளி பருவத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர் வம் அதிகம். ஆரம்பத்தில் எனது கையெழுத்தைப் பார்த்து சிறப்பாக இருக்கிறது என பாராட்டிய ஆசிரியர்கள், ஓவியராக ஊக்கப்படுத்தினர். எனக்கு ரோல் மாடல் என யாரும் கிடையாது. ஓவியம் பிடிக் கும் என்பதால், ஓவியம் வரைவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறேன். பள்ளி கல்வி முடிந்தவுடன் ஓவியக்கல்லூரியில் சேர விரும்பினேன்.

ஆனால், என் குடும்பத்தார் ஓவி யம் வரைந்தால், வேலைவாய்ப்பு பெரிய அளவில் இல்லை எனக் கூறி வேறொரு பிரிவில் படிக்கச் சொன்னார்கள். எனக்கு அதில் ஆர் வம் இல்லாததால், ஃபெயில் ஆகிவிட்டேன். ஆனால், ஓவியம் வரைவதில் தொடர்ந்து ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில் தெற்கு ரயில்வேயில் ஓவியர் பிரிவில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன்.

தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியர்களுக்கு வழங்கப்படும் ‘நுண்கலை விருது’ கடந்த ஆண்டு எனக்கும் வழங்கப்பட்டது. சமீபகாலமாக ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உருவங்களை காண்பது போன்ற ஓவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்த வகையில் 32 ஓவியங்களை வரைந்துள்ளேன்.

அடுத்து ஒரு ஓவியத்தை இருபுறமும் பார்த்து ரசிக்கும் வகையில் 34 ஓவியங்களை வரைந்துள்ளேன். ஒரு புறத்தில் ஒரு உருவமும், அதை தலைகீழாக பார்க்கும்போது மற்றொரு உருவமும் தெரியும். இதுபோன்ற ஓவியங்களை ஒரு சிலர் மட்டுமே வரைவார்கள். இந்தப் பிரி வில் சிறந்த ஓவியங்களை வரைந்து கின்னல் சாதனை செய்ய முயற்சித்து வருகிறேன். ஒரே ஓவியத்தை 4 பக்கமும் பார்த்தால் 4 விதமான உருவங் கள் தெரியும் வகையில் புதிய ஓவியத்தை வரையும் முயிற்சியில் உள்ளேன்’’ என்கிறார்.

இவர் ரயில்வே ஊழியர்தான் என்றாலும் நமக்கு அவர் ரயில்வே ஓவியர். இவரது தூரிகை படைக்கும் ஓவியங்கள் நிச்சயம் கின்னஸ் சாதனை படைக்கும் என எதிர் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x