Published : 05 Apr 2018 10:15 AM
Last Updated : 05 Apr 2018 10:15 AM
தே
சிங்கு ராஜா கோட்டைத் தலமான செஞ்சியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று தினமும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தனது பணியை தொடங்குகிறது. பின்னர் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது.
அரசு நிகழ்ச்சிகளில், நிறுவனங்களில், பள்ளிகளில் மட்டும் கேட்டுப் பழக்கப்பட்ட இந்த நடைமுறை ஒரு தனியார் கடையில் காண்பதற்கு வித்தியாசமாக இருந்தது.
அந்த அங்காடியில் இருந்த உரிமையாளர் அரவிந்த்திடம், இதுகுறித்து கேட்டோம். “இந்த மார்க்கெட் தொடங்கி 15 வருசம் ஆகுது. பல கடைகளில் பக்திப் பாடல்கள் போட்டு பணி யைத் தொடங்கும்போது நாம் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் இசைக்க கூடாது எனத் தோன்றியது.
அதுபோலவே தமிழ்த்தாய்க்கு வாழ்த்து கூறி பணியை ஆரம்பித்தோம். கடை ஊழியர்களும் உரிய மரியாதை செலுத்துறாங்க. காலையில இப்படி ஒருநிலைப்பட்டு நிக்கிறப்ப மனசுக்கு நல்லா இருக்கு. இதுல கலந்துக்கிறதுக்காகவே வேலையாட்களும் குறித்த நேரத் தில கடைக்கு வந்துடுறாங்க’’ என்று கூறி முடித்தார். தமிழ் மொழி மீதான பற்றை இப்படியும் வெளிப்படுத்தலாம் போல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT