Last Updated : 20 Feb, 2018 08:28 AM

 

Published : 20 Feb 2018 08:28 AM
Last Updated : 20 Feb 2018 08:28 AM

புரிய வைப்பதில் புது முயற்சி

பா

டத்தில் படம் காட்டி, எழுத்தை மனப்பாடம் செய் யச் சொல்வதைவிட பாடம் தொடர்பானவற்றை, நேரில் அழைத்துச் சென்று காண்பித்து புரிய வைத்து பின் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும். அந்த அனுபவக் கல்வியை அளிக்கிறார் திருச்சி லால்குடி பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார்.

இதுகுறித்து அவர் கூறியது: 3 ஆண்டுக்கு முன்பு எனது அனுபவக் கல்வி முயற்சியை தொடங்கினேன். மாணவர்களின் ஐயங்களுக்கு விளக்கமளிக்க அஞ்சல் நிலையம், வங்கி, காவல் நிலையங்களுக்கு நேரில் கூட்டிச் சென்று கலந்துரையாட வைத்து புரிய வைத்தேன். அதன்பிறகு அதை வழக்கமாக்கிக் கொண்டேன் என்றார்.

புரிந்து படிக்க வேண்டும். அதற்காக அனுபவப்பூர்வமான கல்வி அவசியமாகிறது. அப்போதுதான் எதிர்கால லட்சியங்கள் இறுதி வடிவம் பெறும். இதற்கான வேலையை ஒரு இயக்கம் போலவே செய்கிறார் சதீஷ்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x