Published : 01 Feb 2018 11:12 AM
Last Updated : 01 Feb 2018 11:12 AM
லைசென்ஸா அப்படீன்னா என்னகய்யா?” என கஞ்சா கருப்பு ரேஞ்சுக்கு கேள்வி கேட்ட ஒரு வயதான வாகன ஓட்டியைப் பார்த்து அதிர்ந்தே போய்விட்டார் போக்குவரத்து காவலர் ஒருவர். இதுகூடத் தெரியாமல் வாகனம் ஓட்டும் இவரின் அறியாமையை அறிந்து நொந்து கொள்வதா அல்லது நடவடிக்கை எடுப்பதா என்று யோசித்தவர், அவருக்கு லைசென்ஸை வாங்கிக் கொடுத்துவிட்டார். இதுபோல அநேகம் பேருக்கு இவரின் உதவி தேவைப்பட , ஆன் தி ஸ்பாட் நடைவடிக்கை மூலம் ஒரு முகாமையே நடத்தி 2 ஆயிரம் பேருக்கு லைசென்ஸ் கிடைக் கச் செய்துவிட்டார்.
புதுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் எ.வீரமணிதான் அந்த போலீஸ்காரர் .
அவர் நம்மிடம் கூறியது: அம்புலியாறு பகுதியில், ஒரு பெரியவரும் ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே மதுபோதையில் வந்த கட்டுமான தொழிலாளியிடமும் எந்த ஆவணமும் இல்லாதது தெரியவந்தது.
இந்த இரண்டு இடங்களிலும் நான் கற்ற பாடம், இனி இவர்களிடம் லைசென்ஸ் கேட்பதைவிட, வாங்கிக் கொடுப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தேன்.
அதன்பிறகு, ஊர் ஊராக பிரச்சாரம் செய்தோம். துண்டறிக்கை கொடுத்தோம். பெரிய அள வில் மாற்றம் இல் லை. அதன்பிறகுதான் ‘ஆன் தி ஸ்பாட்டில்’ லைசென்ஸ் என ஆலங்குடியில் முகாமுக்கு ஏற்பாடு செய்தோம்.
ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் குவிந்தனர். படிப்படியாக அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் கிடைத்தது.
இதற்கு புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராக இருந்த பாலகுருநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் போலீஸார் உதவி செய் தனர்.
விழிப்புணர்வு தேவை
இன்றைக்கும் கிராமப்புற வாகன ஓட்டிகளுக்கு ஆர்சி புக், லைசென்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லை. நம்ம ஊர்லதானே ஓட்டுறோம். டவுனுக்கா போறோம் என நினைக்கிறார்கள். இனி கிராமம் தோறும் முகாம் நடத்தி லைசென்ஸ் வழங்கவும் கூடவே, போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும் வேண்டும். விதி மீறலையும், விபத்தையும் தடுக்க இதுதான் சிறந்த வழி” என்கிறார் உதவி ஆய்வாளர் வீரமணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT