Published : 28 Feb 2018 09:35 AM
Last Updated : 28 Feb 2018 09:35 AM
‘க
ந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என நம் முன்னோர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு சுட்டிக்காட்டி உள்ளனர். இருப்பினும் பல்வேறு நோய்கள் பெருக்கத்துக்கு காரணமே மக்களிடம் போது மான சுகாதார விழிப்புணர்வு இல்லை.
இன்றும் கிராமப் புறங்களில் பொதுவெளியில் மல, ஜலம் கழிப்பது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. நகர்புறங்களிலும் இந்த அவலம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
தொற்றுநோய் பரவுவதற்கான காரணமே பொது வெளியை அசுத்தம் செய்வதுதான். இதை உணர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர், தன் வீட்டில் தனிநபர் கழிவறையைக் கட்ட வைத்ததுடன், ஒரு கிராமத்தையே பொது வெளியில் இருந்து கழிவறைக்கு மாற்றி இருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ராமதேவிதான் இந்த சாதனையை செய்திருக்கிறார். கிராம மக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவரது சேவையை பாராட்டி ராம தேவியை விருதுநகர் மாவட்ட சுகாதார தூதுவராக நியமித்து கவுரவப்படுத்தியிருக்கிறார் ஆட்சியர் அ.சிவஞானம்.
ராமதேவியை சந்தித்தோம். “வத்திராயிருப்பில் உள்ள நாடார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறேன். 9-ம் வகுப்பு படித்தபோது, யார் யார் வீடுகளில் கழிப்பறைகள் உள்ளது என ஆசிரியர் கேட்டபோது நான் தலை குனிந்தேன். அதன் பின்னர் இனிமேல் எதற்கும் தலை குனியக் கூடாது என நினைத்துக்கொண்டேன். கூலித் தொழிலாளியான தந்தையிடமும் தாயிடமும் வீட்டில் தனி நபர் கழிப்பறைக் கட்டுவது குறித்துப் பேசி சம்மதிக்க வைத்தேன்.
பெற்றோரை அழைத்துக் கொண்டு ஊராட்சி அலுவலகம் சென்று விசாரித்தேன். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் கொடுக்கப்படுவதை அறிந்து கொண்டோம். தற்போது எங்கள் வீட் டில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. என் வீட் டைப் போல ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வைக்க வேண்டும் என உறுதி எடுத்தேன்.
முதலில் சக மாணவிகளிடம் இதுகுறித்து எடுத்துக் கூறினேன். பின்னர், எனது கிராமத்தில் உள்ளவர்களிடமும் பேசினேன். தற்போது எங் கள் ஊரில் ஏராளமானோர் கழிப்பறைகளைக் கட்டத் தொடங்கிவிட்டனர். இனி யாரும் புதர் பகுதிக்குச் செல்ல மாட்டார்கள். எங்கள் கிராமம் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
பெரிய வர்த்தக நிறுவனங்கள், பெரிய திட்டப் பணிகள் ஆகியவற்றுக்கு நடிகர், நடிகைகளை தூதுவராகப் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் இந்தக் காலத்தில், ஒரு மாவட்டத்துக்கே சுகாதார தூதுவராக ஒரு அரசுப் பள்ளி மாணவி நியமிக்கப்பட்டிருப்பது அவருக்கல்ல.., நமக்குதான் கவுரவம். மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு சல்யூட் போட வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT