Published : 16 Jan 2018 10:32 AM
Last Updated : 16 Jan 2018 10:32 AM
செ
ன்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தந்தை சந்தானகிருஷ்ணன் டீக்கடை நடத்தினார். ஆனால், அவரது தாய் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர். அந்த ஆர்வத்தில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் படித்தார். பரத நாட்டியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மெலட்டூரைச் சேர்ந்த மாங்குடி துரைராஜ் ஐயரின் பிரதம சீடர்களில் ஒருவரான எம்.சுந்தரத்தை தனது குருவாக ஏற்றார். 13 வயதில் அவரது நடனப் பள்ளியில் சேர்ந்து பரத நாட்டியம் கற்றார். பின்னர் பெரம்பூர் பெரியார் நகர், ஏரிக்கரைத் தெருவில் 1980-ம் ஆண்டு தனது குருவைக் கொண்டு ‘அஞ்சலி நாட்டியாலயா’ என்ற நாட்டியப் பள்ளியைத் தொடங்கினார்.
சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தெரிந்தாலும் தமிழ் மொழி மீது அலாதி பிரியம். அதனால் தமிழ் பாடல் மூலம் மட்டுமே பரதம் கற்றுக் கொடுக்க விரும்பினார். இதற்காக கேரளாவில் சுவாதித் திருநாள் மகாராஜா இயற்றிய தில்லானாவையும் தெலுங்கு தெம்மாங்கையும் தமிழாக்கம் செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக தமிழில் மட்டும் பரத நாட்டியம் ஆடுவதுடன், தனது மாணவர்களுக்கும் அவ்வழியிலே பரதம் கற்றுத் தருகிறார். பரதநாட்டியத்துக்காக யாராவது இவர் பாடல்களைக் கேட்டால் இலவசமாகவே வழங்குகிறார். இவரது கலைப் பயணத்தில் மனைவி விஜயாவும், மகள் கலைவாணியும் இணைந்தனர்.
ஏழைக் குழந்தைகளும் பரதம் கற்க வேண்டும் என்பதற்காக இலவசமாக கற்றுத் தருகிறார்.
“நம் நாட்டின் பராம்பரியமிக்க பரத நாட்டியக் கலையை அனைவரிடமும் சேர்க்க வேண்டும் என்பதே குறிக்கோள்” என்கிறார் ரவிச்சந்திரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT