Published : 03 Jan 2018 09:53 AM
Last Updated : 03 Jan 2018 09:53 AM
கா
ஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழுமத்தூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் பாலசந்தர் (14). தந்தை பழனி, சென்னை மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தாய், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர்.
பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட பாலசந்தர், 1835-ம் ஆண்டு நாணயம் தொடங்கி, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் வரை, குறுகிய காலத்தில் 3,000 நாணயங்களை சேகரித்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நாணயக் கண்காட்சியும் நடத்தியுள்ளார்.
‘‘என் தாத்தா உட்பட குடும்பத்தில் பலரும் ஆங்கிலேயரிடம் பணியாற்றியவர்கள். இதனால் எங்கள் வீட்டில் பல நாணயங்கள் இருந்தன. உறவினர்களிடம் இருந்தும் நாணயங்களை சேகரித்தேன். பழங்கால இந்திய நாணயங்களை சேகரிக்க அப்பா உதவினார். பத்திரிகைகள், இணையதளங்கள் மூலமாக நாணயங்கள் பற்றிய தகவல், வரலாற்றை அறிந்துகொண்டேன்’’ என்று கூறும் பாலசந்தர், சோழர் கால நாணயம், 1835-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள், விக்டோரியா மகாராணி, 7-வது எட்வர்டு மன்னர், 5-வது, 6-வது ஜார்ஜ் மன்னர்கள், அணா, தொண்டிகாலணா உட்பட பல நாணயங்களை வைத்துள்ளார். 120 வெளிநாட்டு நாணயங்கள், அச்சுப் பிழையோடு வெளிவந்த நாணயங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.
பழமை, பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் நாணயங்களை சேகரிக்கும்போது, நாட்டின் வரலாறு, தொன்மை, வளம் என அனைத்தையும் அறிய முடிகிறது. இதை அனைவரும் அறியவேண்டும் என்றுதான் கண்காட்சி நடத்துகிறேன் என்கிறார் பெருமிதத்தோடு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT