Published : 30 Nov 2017 10:16 AM
Last Updated : 30 Nov 2017 10:16 AM

கிறிஸ்துமஸ் ‘கேக் மிக்ஸிங் செரிமனி’: களைகட்டும் உதகை

கே

க் இல்லாமல் கிறிஸ்துமஸ் நகராது. உதகையில், கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க பழக்கலவை செய்யும் நிகழ்வையே ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டதால் உதகையில் இப்போது இந்த விழாக்கள் ஆங்காங்கே களைகட்டு கின்றன.

கேக் பலவகை இருந்தாலும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ தான் இன்றைக்கும் உலகப் பிரபலம். கிறிஸ்துமஸ் கேக் அறிமுகமாகும் முன்பு, ஆங்கிலேயர்கள், கிறிஸ்துமஸ் தினத்தில் விரதம் கடைபிடிப்பார்கள். மாலையில் கூழ் தயாரித்து அதை உண்டு விரதம் முடிப்பார்கள். அதற்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தக் கூழில் உலர் பழங்கள், தேன், மற்றும் வாசனைத் திரவியங்களைச் சேர்த்தனர்.

பிளம் கேக் பிறந்தது

இதற்கு அடுத்தபடியாக, இந்தக் கலவையுடன் கோதுமை மாவு, முட்டை, வெண்ணெய் ஆகிய வற்றைக் கலந்து அந்தக் கலவையை வேகவைத்து கேக் தயாரித்தனர். இப்படித்தான் ‘பிளம் கேக்’ பிறந்தது. ஓவன் வைத்திருந்த செல்வந்தர்கள் உலர் பழங்களையும் வாசனைத் திரவியங்களையும் கொண்டு கேக் தயாரித்தனர். உலர் பழங்களை சர்க்கரை பாகில் ஊரவைத்தால் அவை நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும் என்பதை கண்டறிந்து, அந்த தொழிநுட்பத்தைக் கேக் தயாரிக்கப் பயன் படுத்தினர்.

கி.பி 17-ம் நூற்றாண்டில், கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி வரும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் அளித்து மகிழ்ந்தனர். 18-ம் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்துமஸ் அன்று மட்டுமல்லாமல், ஈஸ்டர், திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கேக் முக்கிய இடம் பிடித்தது.

‘கேக் மிக்ஸிங் செரிமனி’

சரி, ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ என்று சொல்லபப்டும் பழக்கலவை செய்யும் நிகழ்வுக்கு வருவோம். 18-ம் நூற்றாண்டிலிருந்தே இந்த பழக்கலவை செய்யும் நிகழ்வை ஒரு விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். இப்போது, உதகை யில் மட்டுமில்லாது இந்தியாவின் பிரபல நட்சத்திர ஓட்டல்களிலும் கிறிஸ்துமஸ் கேக்கிற்காக பழக்கலவை செய்யும் நிகழ்ச்சிகளைகட்டுகிறது.

அண்மையில், உதகையிலுள்ள ஜெம் பார்க் ஓட்டலில் பழக்கலவை செய்யும் நிகழ்ச்சி மினி விழாவாக கொண்டாடப்பட்டது. இதில், ஓட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் என பல தரப்பினரும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரிச்சம் பழம், டியூட்டி ஃப்ரூட்டி, உலர் விதைகளான பாதாம், பிஸ்தா இவற்றுடன் வாசனை திரவியங்களைக் கலந்து பழக்கலவை தயாரிக்கப்பட்டது. இதனுடன் ரம், ஒயின் பழச்சாறு, தேன் உள்ளிட்டவையும் கலக்கப்பட்டன.

120 கிலோவில் கேக்

இந்த கலவை மர பீப்பாயில் ஒரு மாத காலத்துக்கு வைத்துப் பதப்படுத்தப்படும். அதன் பிறகு, இதனுடன் தேவையான அளவு கோதுமை மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்படும். இந்தக் கேக்கை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்களாம்.

பாரம்பரியமிக்க இந்த பழக்கலவை செய்யும் விழா குறித்து ஜெம் பார்க் ஹோட்டலின் தலைமை சமையல் கலைஞர் சுரேந்திரன் நம்மோடு பேசினார். “கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னதாகவே ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உதகைக்கு இதை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேயர்கள். இன்றைய நிகழ்ச்சியில் உலர் திராட்சை, அத்தி, செர்ரி பழங்களுடன் முந்திரி, மதுபானம் கலந்து தயாரிக்கப்பட்ட பழக்கலவையைக் கொண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் 120 கிலோ எடையில் கேக் தயாரித்து, அதை இங்கு வருபவர்களுக்கு பகிர்ந்தளிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x