Published : 16 Jul 2014 03:42 PM
Last Updated : 16 Jul 2014 03:42 PM

ருசி நிறைந்த ராமநாதபுரம்: க‌ட‌ல்பாசி இள‌நீர் அல்வா

தமிழகமும், இலங்கையும் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளதால், தமிழர்கள் உணவில் கடல் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மீன், இறால், நண்டு, கணவாய் ஆகியவை தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. இதில் ராமேஸ்வரம் தீவில் செய்யப்படும் கடல் உணவுகள் தனித்தன்மை நிறைந்தவை. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

க‌ட‌ல்பாசி இள‌நீர் அல்வா

ராமேஸ்வரம் தீவைச் சுற்றி நடைபெறும் மாற்றுத் தொழில்களில் ஒன்று கடல்பாசி வளர்ப்பு. கடல்பாசியிலிருந்து ஜெல்லி உணவுகள், ஐஸ்கிரீம் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. கடல்பாசியில் இருந்து தயாராகும் உணவு வகைகளில் கடல்பாசி இளநீர் அல்வாவும் ஒன்று.

என்னென்ன தேவை?

கடல் பாசி - 10 கிராம்

தண்ணீர் - இரண்டு டம்ளர்

இள‌நீர் - 1

சர்க்கரை - தேவையான அளவு

பாதா‌ம் பருப்பு - 10

பச்சை கலர் எசென்ஸ் - சில துளி

எப்படிச் செய்வது?

அடுப்பில் அகலமான சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும்போது எசென்ஸைச் சேர்த்து சட்டியை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

பின்னர் சதுரமாக உள்ள பாத்திரத்தில் அடுப்பில் இருந்து இறக்கிய கடல்பாசி கலவையை வடிகட்டிக்கொண்டு சலித்து ஊற்றவும். பின்னர் இளநீரை முழுவதுமாகச் சதுரப் பாத்திரத்தில் இரண்டாவது அடுக்காக ஊற்றவும். பின்னர் இளநீர் வழுக்கையையும், பாதாம் பருப்புகளையும் சிறு சிறு துண்டுகளாக மேலே தூவி விடவும்.

சூடு இறங்கியதும் அல்வா கெட்டியாகத் தொடங்கும். பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும். கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிச் சாப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x