Published : 11 Dec 2016 01:00 PM
Last Updated : 11 Dec 2016 01:00 PM
என்னென்ன தேவை?
முழு கறுப்பு உளுந்து - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
- தேவையான அளவு (பொரிப்பதற்கு)
எப்படிச் செய்வது?
முழு உளுந்தை ஐந்து மணி நேரம் ஊற வைத்து , தோலுடன் சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். மிளகு, சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் பொடித்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து சூடானவுடன் , மாவை மெல்லிய வடைகளாக , துணியில் அல்லது வாழை இலையில் தட்டிப் பொரித்து எடுக்கவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT