Published : 25 Dec 2016 03:28 PM
Last Updated : 25 Dec 2016 03:28 PM

கப் கேக்

என்னென்ன தேவை?

மைதா, சர்க்கரை – தலா 150 கிராம்

தயிர் - கால் கப்

நறுக்கிய செர்ரி அல்லது டூட்டி ஃபுரூட்டி - 50 கிராம்

உப்பு - ஒரு சிட்டிகை

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

விருப்பமான எசென்ஸ் - அரை டீஸ்பூன்

பால் - 2 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

வெண்ணெய் – 50 கிராம்

மோல்ட் அல்லது அலுமினிய கிண்ணம் – விருப்பப்படி

எப்படிச் செய்வது?

வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய், தயிர், பால் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். எசென்ஸ், சர்க்கரை சேர்த்து கரையும்வரை அடியுங்கள். நறுக்கிய செர்ரி, டூட்டி ஃபுரூட்டி சேர்த்துக்கொள்ளுங்கள். மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்துச் சலித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், சர்க்கரை கலவையில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்துகொள்ளுங்கள். இந்த மாவை அலுமினிய கிண்ணங்களில் பாதியளவு ஊற்றுங்கள். (இந்தக் கலவையில் முட்டை சேர்த்தால் கேக் மிகவும் மென்மையாக வரும்)

பேக்கிங் அவனில் செய்வதாக இருந்தால் 180 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்யலாம். சிறு குச்சியால் குத்திப் பார்த்து வேகவில்லை என்றால் மீண்டும் 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.

குக்கரில் வைப்பதாக இருந்தால் கேஸ்கட், வெயிட் தேவையில்லை. கேக் பாத்திரம் அலுமினியமாக இருக்க வேண்டும். கேஸ்கட், வெயிட் போடாமல் குக்கரில் 2 அங்குல அளவு மணலை நிரப்பி, குறைந்த தணலில் அடுப்பை 20 நிமிடம் சூடாக்கிக்கொள்ளுங்கள். மோல்டில் ஊற்றி வைத்துள்ள கேக்கை அதில் வைத்து மூடி, சுமார் 40 நிமிடங்கள்வரை வேகவையுங்கள். சிறு குச்சியால் குத்திப் பார்த்து வெந்திருந்தால் எடுத்துவிடுங்கள். இல்லையெனில் கூடுதலாகச் சில நிமிடங்கள் மீண்டும் வேகவையுங்கள்.

படங்கள்: எல். சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x