Last Updated : 13 Nov, 2016 02:59 PM

 

Published : 13 Nov 2016 02:59 PM
Last Updated : 13 Nov 2016 02:59 PM

பிரெட் பிரியாணி

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - ஒரு கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பிரெட் துண்டுகள் - 5

கேரட் - கால் கப்

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பிரியாணி மசாலா, கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - 1

முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன்

புதினா, மல்லித்தழை - சிறிதளவு

பட்டை – சிறு துண்டு

கிராம்பு - 2

உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பிரெட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், இஞ்சி - பூண்டு விழுது, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு வெங்காயம், முந்திரி, கேரட், புதினா போட்டு வதக்கி உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றுங்கள். அதில் கரம் மசாலாத் தூள், பிரியாணி மசாலா சேர்த்து ஊறிய அரிசியைப் போட்டு இரண்டு விசில் விட்டு இறக்கிவையுங்கள். குக்கர் சூடு ஆறியதும் திறந்து, நெய்யில் வறுத்த பிரெட், மல்லித்தழை சேர்த்துக் கிளறிவிடுங்கள். சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்துப் பரிமாறுங்கள்.

காய்கறிகள் குறைவாகவும் பிரெட் அதிகமாகவும் இருக்க வேண்டும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடித்துவிடுங்கள். வாணலியில் சிறிது நெய் விட்டு அரிசியை வறுத்த பிறகு பிரியாணி செய்தால் உதிரியாக இருக்கும்.

காய்ச்சல் வந்தால் மட்டுமே பிரெட் சாப்பிடுவது என்ற நிலை இன்றில்லை. பெரும்பாலான வீடுகளிலும் பிரெட்டை வைத்துதான் காலை சிற்றுண்டி தயாராகிறது. பிரெட் ஆம்லெட், சாண்ட்விச், தீயில் வாட்டிய பிரெட் என்று பல வகைகளில் பிரெட்டைச் சாப்பிடுகிறார்கள். “மைதா, கோதுமை என இரு வகைகளிலும் பிரெட் கிடைப்பதால் விரும்பிய சுவையில் பிரெட்டை விதவிதமாகச் சமைக்கலாம்” என்று சொல்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சுவைக்கும் பிரெட் உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சுதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x