Published : 13 Nov 2016 02:48 PM
Last Updated : 13 Nov 2016 02:48 PM
என்னென்ன தேவை?
பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா அரை கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
துவரம் பருப்பு, உளுந்து - தலா கால் கப்
பிரெட் துண்டுகள் - 10
நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசி, புழுங்கலரிசி, வெந்தயம், துவரம் பருப்பு, உளுந்து இவற்றை ஊறவைத்து, அரையுங்கள். உப்பு சேர்த்துப் புளிக்கவிடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பிரெட்டின் ஓரங்களை வெட்டியெடுங்கள். நறுக்கியவற்றையும், பிரெட் துண்டுகளையும் புளித்த மாவுடன் கலக்குங்கள். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த மாவைக் கனமான தோசையாக ஊற்றி, மேலே தேங்காய்த் துருவலைத் தூவுங்கள். சுற்றிலும் எண்ணெய்விட்டு, திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும் எடுங்கள். சட்னியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும். உடனடி ஊத்தப்பம் வேண்டும் என்றால் தோசை மாவில் பிரெட் துண்டுகளைச் சேர்த்துச் செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT