Published : 11 Oct 2016 10:41 AM
Last Updated : 11 Oct 2016 10:41 AM
என்னென்ன தேவை?
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 2 கப் வாழைப்பூ - ஒரு கப் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை, கசகசா வறுத்துப் பொடித்தது - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு அரைக்க தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 2 புதினா இலை, கொத்தமல்லி இலை – தலா கால் கப் தேங்காய்த் துருவல் - கால் கப் நெய், முந்திரி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாழைப்பூவைத் தயிரில் போட்டு பத்து நிமிடம் தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அரிசியை வெறும் வாணலியில் வறுத்துத் தனியே வையுங்கள். அரைக்க வேண்டிய மசாலாப் பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வாழைப்பூவை வதக்கிக் கொள்ளுங்கள். இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்குங்கள். பிறகு உப்பு சேர்த்து, மூன்று கப் தண்ணீர் விட்டு அரிசி, மசாலாப் பொடி சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடிவிடுங்கள். ஒரு விசில் வந்ததும் இறக்கி வையுங்கள். குக்கரைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவிப் பரிமாறுங்கள். வெள்ளரி, தயிர் பச்சடியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT