Published : 22 May 2016 01:52 PM
Last Updated : 22 May 2016 01:52 PM
என்னென்ன தேவை?
பச்சை வேர்க்கடலை - 100 கிராம்
பொடியாக அரிந்த வெங்காயம் - ஒரு கப்
நறுக்கிய தக்காளி - கால் கப்
வெள்ளரித் துண்டுகள், மாங்காய்த் துண்டுகள் - தலா கால் கப்
துருவிய கேரட், ஓமப் பொடி - தலா கால் கப்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
சுட்ட அப்பளம் - 2
பேரிச்சம் பழம் - 6
கருப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா, சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வேகவையுங்கள். பாதியளவு வெந்தால் போதும். வேகவைத்த கடலையுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, மாங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கலக்குங்கள். அதனுடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா சேர்த்துக் கொத்தமல்லி தூவிப் பரிமாறுங்கள்.
குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது ஓமப் பொடி, சுட்ட அப்பளத்தை நொறுக்கி, மேலே தூவுங்கள். இந்த சாட், இனிப்பும் புளிப்பும் நிறைந்து, குழந்தைகளின் மனம் கவரும்.
விசாலா ராஜன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT